Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரியல் எஸ்டேட்: பார்த்த இடம் ஒண்ணு... பதிவு செய்து தந்த இடம் ஒண்ணு!

ரியல் எஸ்டேட்:  பார்த்த இடம் ஒண்ணு...
பதிவு செய்து  தந்த இடம் ஒண்ணு! 
 
மாத தவணையில் பணம் கட்டி ஈஸியாக இடம் வாங்கலாம் என ரியல் எஸ்டேட் நிறுவனம் சொன்னதை நம்பி  ஏமாந்து நிற்கிறோம் என  திருச்சி  சங்கரன் பிள்ளை தெருவில் இயங்கிவரும் சாரதி ரியல் எஸ்டேட் எனும் நிறுவனத்தின் பரசுராமன் மீது திருச்சி, சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்ட 25க்கும் மேற்ப்பட்டோர்  திருச்சி கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
 
 புகார் கொடுத்தவர்களில் ஒருவரான திருச்சி மாவட்டம் இடைக்குடியை சேர்ந்த ஜபதுரை, , ''கடந்த 2006 ம் ஆண்டு சென்னையில் வேலை செய்துக்கிட்டு இருந்தோம். அப்போது நண்பர் திருநாவுக்கரசு  என்பவர் திருச்சி மாவட்டம் சிறுகனூருக்கு அருகே  தேசிய நெஞ்சாலையில்  இடம் இருக்கு, மாத தவணையில் பணம் கட்டினால் 25 மாதத்தில் இடத்தை கிரயப்பண்ணி கொடுத்துடுவாங்க என சொன்னார். ரியல் எஸ்டேட் நடத்தும் நபர், திருச்சியில் இரண்டு லேடிஸ் ஹாஸ்டல் நடத்துகிறார். அதையெல்லாம் பார்த்த பிறகு, பாடாலூருக்கும் சிறுகனூருக்கும் இடையே  இடம் லே அவுட் காமிச்சாங்க.  நம்பிக்கையாக  மாதம் 200 ரூபாய் வீதம் பணம் கட்டினோம். 25 மாதம் பணம் கட்டினோம். பணம் கட்டி முடித்ததும் புள்ளம்பாடி ரெஜிஸ்டர் ஆபிஸில், பத்திரப் பதிவு என கட்டிய பணத்தோடு மொத்தம் 24,000 பணம் கட்டியதும்,  1,400 சதுர அடி நிலம் எங்கள் பெயரில் பத்திரம் பதிவு செய்து கொடுத்தார்.  எங்களுக்கு காட்டிய இடத்தில் கல் போட்டு இருந்தது அந்த வழியாக போகும்போது பார்த்துவிட்டு போவோம். கையில் காசு கிடைக்கும்போது இந்த இடத்தை பயன்படுத்தலாம் என இருந்தோம் ஆனால் எங்கள் நினைப்பில் இடி விழுந்தது" என்றார். 
 
தொடர்ந்தார் மகாலிங்கம், ''இப்படி நினைச்சிக்கிட்டு இருந்தோம்.  மூன்று வருடம் கழித்து எங்களுக்கு எழுதி கொடுத்த இடத்தில் போடப்பட்டிருந்த கல் எதுவும் அங்கு இல்லை. என்ன சார் கல்லைக் காணும் என கேட்டபோது, புதுசா கல்லு போடனும்னு எடுத்து வைத்திருக்கிறோம் என சொன்னார். அப்படியே நாட்கள் இழுத்துப்போட, நம்பிக்கையில்லாமல் சார் நேர்ல வாங்க. இடத்தை காட்டுங்க என கூப்பிட்டபோது, அவர் வந்து காட்டியது பாடாலூர் அடுத்து உள்ள 15 கிலோமீட்டர் தொலைவில் உள்காட்டுல ஒரு இடம். அதெல்லாம் எங்களுக்கு வேண்டாம் நீங்கள் எங்களுக்கு காட்டிய இடத்தை கொடுங்கன்னு கேட்டபோது கொடுத்துடுறேன் சார் என  இழுத்தடித்தார். கிட்டத்தட்ட 500 பேருக்கும் மேல இவர்க்கிட்ட பணம் கட்டியிருக்கிறோம். திருச்சி மட்டுமல்லாமல், சென்னை, காஞ்சிபுரம்னு பல ஊர்களில் இவங்க ஆளுங்க பணம் வசூல் பண்ணினாங்க. நாங்கள் இடம் வேண்டாம் கட்டின பணத்தையும், கொடுங்க போதும்னு கேட்டோம். அவரும் அவரது மனைவி  ஜான்சி ராணியும் பேசி சமாளித்தாங்க. சரி இவங்க நம்மை ஏமாத்துறாங்க என உணர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் அலுவலகத்தில் வந்து நியாயம் கேட்டோம். அப்போது நடந்தது நடந்துபோச்சு,  அந்த இடம் இப்போ மார்க்கெட் வேல்யூ ஏறிடிச்சு. அதனால்  நான் முன்பு சொன்ன இடத்தை உங்களுக்கு தர முடியாது என சொன்னார் பரசுராமன்,  எங்களிடம் முதன்முதலில் வந்து பேசிய திருநாவுக்கரசு சில வருடங்களுக்கு முன் இறந்துபோய்விட்டதால் மேலும் என்ன செய்வதென தெரியல. இறுதியில் சரி எங்களுக்கு உங்க இடமெல்லாம் வேண்டாம் கட்டுன பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுங்கன்னு கேட்டோம். மிக நீண்ட பேச்சுவார்த்தைக்குபிறகு கடைசியாக  தலா 1 லட்சம் வீதம், மொத்தம் 25 லட்சத்தை செட்டில் செய்வதாக   அக்ரிமெண்ட் போட்டு கையெழுத்து போட்டு கொடுத்து எங்களை அனுப்பி வைத்தார். நாங்கள் ஊருக்குபோன சில நாட்களில்  உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அப்போதுதான் இவர் நம்மை ஏமாற்றப்பார்க்கிறார் என முடிவு செய்தோம்.  தவறு செய்தவருக்கே இவ்வளவு துணிச்சல் இருக்கும்போது, நாம் என்ன பணம் கட்டியவர்கள்தானே. போலீஸ்ல கம்லைண்ட் கொடுப்போம் உண்மை என்னவென்று காவல்துறை முடிவெடுக்கட்டும் என இன்று புகார் கொடுத்துள்ளோம். பணத்தையும் கட்டிட்டு நாங்கள் படும் கஸ்டம் கொஞ்ச நஞ்சமல்ல என்றார் சோகத்துடன்,
 
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பரசுராமனிடம் கேட்டோம்.
 
''பல வருடமாக இந்த பீல்ட்ல நான் இருக்கிறேன். இதுவரை இப்படி ஒரு பிரச்னை வந்ததில்லை. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களிடம் பிஸ்னஸ் பண்ணியிருக்கிறேன். ஆனால் இவர்கள் நான் பத்திரப்பதிவு செய்த இடத்தை விட்டுவிட்டு இவர்களா ஒரு இடத்தை கேட்டு பிரச்னை பண்ணுறாங்க. அவங்க கட்டுன பணத்திற்கு பத்திரம் பண்ணி கொடுத்தாச்சு. இப்ப நாங்கள் கட்சியில இருக்கோம் என என்னை மிரட்டி, பணம் கொடுப்பதாக எழுதி வாங்கிட்டாங்க. அது தவறு, நான் எல்லாத்தையும் நீதிமன்றம் மூலம் பார்த்துக்கலாம் என வழக்கறிஞரை வைத்து நோட்டிஸ் கொடுத்து இருந்தேன். இந்நிலையில் இவர்கள்  போலீஸில் கம்லைண்ட் கொடுத்திருக்காங்க. அனைத்தையும் சட்டப்படி சந்திப்போம்" என்றார்.
 
- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close