Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜஎம்எஃப் அறிக்கையால் அதிகரித்த சந்தை, சர்வதேச சந்தையால் சரிந்தது!

காலை 10.20 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (5.10.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
நேற்றைய வர்த்தகத்தின் இடையே 4-வது நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 'ரெப்போ' 6.25% ஆக உள்ளது. இது முன்னதாக 6.50% ஆக இருந்தது. வட்டி விகிதம் குறைப்பு நடவடிக்கையால் சந்தை அதிகரித்து காணப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்றைய காலை வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்து காணப்பட்டது. ஏனெனில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று பன்னாட்டு நிதியம் தெரிவித்து இருந்தது. இதன் தாக்கத்தினால் இந்திய சந்தைகள் முன்னேற்றத்தில் இருந்தன. எனினும் சர்வதேச சந்தை பலவீனமாக வர்த்தகமாகி வருவதால் இந்திய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 75.25 புள்ளிகள் குறைந்து 28,252.00 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 28.75 புள்ளிகள் குறைந்து 8,742.60 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஹிண்டால்கோ 158.30 2.63
பார்தி இன்ப்ராடெல் 376.40 1.95
டாடா மோட்டார்ஸ் (டி) 353.60 1.30
எஸ்பிஐ 262.00 0.87
டாடா மோட்டார்ஸ் 554.70 0.86
 
விலை குறைந்த பங்குகள்
பஜாஜ் ஆட்டோ 2,856.10 -1,32
ஓஎன்ஜிசி 270,35 -1,17
ஹெச்சிஎல் டெக் 808,95 -1,12
பி.எச்.இ.எல் 136,45 -1,12
ஆக்சிஸ் வங்கி 540,65 -1,09

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close