பங்குச் சந்தை முதலீடு: லாபம் ஈட்ட ஐந்து முக்கிய விதிமுறைகள்..!
பங்குச் சந்தை முதலீடு: ஐந்து முக்கிய விதிமுறைகள்..!
தி.ரா.அருள்ராஜன்
தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.
ஒவ்வொருவரும் கண்டிப்பாக முதலீட்டாளராக இருக்கவேண்டும். தங்களுக்கு என்று ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்கி, அதை நிர்வகிக்க வேண்டும். இதுதான் நம்முடைய குடும்பத்தின் பொருளாதார தேவையை நீண்ட கால அடிப்படையில் பூர்த்தி செய்ய உதவும்.
பங்குச் சந்தை முதலீட்டிற்கான ஐந்து முக்கிய விதிமுறைகள்
1. உபரி பணத்தில் மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்யவேண்டும்.
2. பணத்தை பகுதி பகுதியாக பிரித்து முதலீடு செய்யவேண்டும்
3. ஒரு பகுதி பணத்தையும் வெவ்வேறு துறைசார்ந்த நிறுவனத்தில் முதலீடு செய்யவேண்டும்.
4. முதலீடு செய்த பிறகு லாபத்திற்கு இலக்கு வைக்கவேண்டும்.
5. லாபம் வந்ததும் அதனை எடுத்துவிட வேண்டும்.
இவற்றை பின்பற்றினால் நிச்சயம் பங்குச் சந்தையில் லாபம் பார்க்க முடியும்.