Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செப்டம்பர் சிபிஐ-யை எதிரொலி சரிந்தது சென்செக்ஸ்!

இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (13.10.16) காலை நேர வர்த்தகத்தில் அதிக இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. 
 
நாடெங்கும் தசரா மற்றும் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு 11 மற்றும் 12ம் தேதி இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சர்வதேச சந்தை நிலை மந்த நிலையில் வர்த்தகமாகி வருவதாலும், ஆசிய சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமாகி வருவதாலும் சந்தை இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இதுமட்டுமின்றி செப்டம்பர் நுகர்வோர் விலை குறியீட்டு எண் (சிபிஐ) டேட்டா இன்று வெளியாக உள்ளது. இதனையொட்டி முதலீட்டாளர்கள் கவனத்துடன் வர்த்தகம் மேற்கொண்டு வருவதாலும் சந்தை இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 249.07 புள்ளிகள் குறைந்து 27,828.96 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 81.55 புள்ளிகள் குறைந்து 8,626.40 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஓஎன்ஜிசி 272.65 2.14
இன்போசிஸ் 1,049.60 1.91
சிப்லா 588.95 1.43
பிபிசிஎல் 664.25 0.98
இன்டஸ் இன்ட் வங்கி 1,230.50 0.77
 
விலை குறைந்த பங்குகள்
 
பேங்க் ஆப் பரோடா 157,20 -2,93
ஜீ எண்டர்டெயின் 552,85 -2,77
ஐசிஐசிஐ வங்கி 243,70 -2,56
ஹிண்டால்கோ 157,00 -2,33
ஹெச்டிஎப்சி 1,360.00 -2,26
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close