Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்கள் சமூக வலைத்தள கருத்துக்கும் இன்ஸூரன்ஸ் வருகிறது!

மூக வலைத்தளங்களில் நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்து வழக்கு பதிந்து விட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா?
 
உங்களுடைய கருத்துக்கும் இன்ஸூரன்ஸ் எடுக்கலாம் என்கிறது பஜாஜ் அலையன்ஸ் இன்ஸூரன்ஸ் நிறுவனம்.  இதற்காக சைபர் இன்ஸூரன்ஸ் பாலிசியினை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பாலிசியில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துபவர்களின் நற்மதிப்பும்,  நிதி மற்றும் இதர முக்கிய தகவல்கள் இழப்புகள் மற்றும் திருட்டுகள், மன உளைச்சலுக்கு உள்ளாக்குதல், வங்கி கணக்கு விவரங்களை திருடுதல் போன்ற இழப்புகளுக்கு இந்த இன்ஸூரன்ஸ் ஈடு செய்யும்.  

 

தற்போது சமூக வலைத்தளங்களையும், ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம்  தனிமனித தகவல்களுக்கும் ஆபத்தும் அதிகரித்து வருகிறது என்ற அடிப்படையில் இந்த பாலிசி முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது சைபர் பாலிசியினை ஐடி நிறுவனங்கள், வங்கிகள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவை பயன்படுத்தி வருகின்றன. சைபர் இன்ஸூரன்ஸ் 1000 கோடி ரூபாய்க்கு  வர்த்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுக்குள் இது பெரிய அளவில் வளரவும் வாய்ப்பு உள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close