Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பங்குச்சந்தை சரிந்த போதும் புதிய உச்சம் தொட்ட 120 பங்குகள்!

கடந்த செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 29000 என்ற புள்ளியை தொட்டு புதிய சாதனை படைத்தது. ஆனால் அதன் பின்பு 1400 புள்ளிகள் சரிந்து இருக்கிறது. இவ்வாறு  கடந்த வாரங்களில் பங்கு சந்தை சரிந்த போதும் 120 பங்குகள் புதிய உச்சத்தை தொட்டு இருக்கின்றன.  
 
 
இதில் 55 பங்குகள்  செப்டம்பர் மாதத்திலும், 66 பங்குகள் அக்டோபர் மாதத்திலும்  புதிய உச்சத்தையும் தொட்டு இருக்கின்றன. இதற்கு காரணம் இந்த நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி நிலையிலும், முன்னேற்றத்தையும் கண்டு நல்ல வலுவான நிலையிலும் இருக்கின்றன. 
செப்டம்பர் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ, பயோகான், பிரிட்டானியா இன்டஸ்டரீஸ், சிட்டி யூனியன் வங்கி, டீவிஸ் லேபராட்டரீஸ், டாக்டர் லாப் பாத்லேப்ஸ், எய்ஷர்  மோட்டார்ஸ், ஹூரோ மோட்டார் கார்ப்பரேசன், ஐடிஎஃப்சி பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், பிவிஆர், ரெப்கோ மற்றும் அல்ட்ராடெக் போன்ற நிறுவனங்கள் புதிய உச்சத்தை தொட்டு இருக்கின்றன.
 
போர்ஜ் மோட்டர்ஸ், க்ரூக் ஃபைனான்ஸ், ஹாவல்ஸ் இந்தியா, அரோபிந்தோ பார்மா, ஒரியண்ட் சிமெண்ட், அஜந்தா பார்மா, வகிரன்ஜி, டெல்டா கார்ப், டால்மியா பாரத், ஶ்ரீ சிமெண்ட், அதுல், எஸ்கார்ட்ஸ் மற்றும் ஜோதி லேபராட்டரீஸ் போன்ற  நிறுவனங்கள் அக்டோபர் மாதத்தில் புதிய உச்சத்தை தொட்டு இருக்கின்றன. அக்டோபர் மாதத்தில் ஸ்மால்கேப் இண்டெக்ஸ் 2% உயர்ந்தும், மிட்கேப் இன்டெக்ஸ் 1% உயர்ந்தும் காணப்படுகிறது. இரண்டாவது காலாண்டு முடிவுகள் வந்துக் கொண்டிருக்கிறது. இந்த முடிவுகள் பங்கு வர்த்தகத்திலும் எதிரொலித்து வருகிறது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close