வங்கி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளால் சரியும் சந்தை!
காலை 10.20 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (19.10.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 2 நாள் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பொருள்களுக்கு எத்தனை சதவிகிதம் வரி விதிக்கலாம் என்பது பற்றி முடிவாக உள்ளது. இதன் காரணமாக நேற்று பங்குச் சந்தையில் புள்ளிகள் உயர காரணமாக இருந்தது. சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் நேற்று 521 புள்ளிகள் உயர்ந்து 28,050 புள்ளிகளில் நிலைக்கொண்டது. கடந்த 5 மாதங்களில் இதுவே அதிக உயர்வாகும். தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 157 புள்ளிகள் அதிகரித்து 8,677 ஆக இருந்தது. நேற்று காலை முதலே பங்கு வர்த்தகத்தில் விறுவிறுப்பு காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 521 புள்ளிகள் அதிகரித்து 28,051 புள்ளிகளில் நிலைக் கொண்டது. நிப்டியும் 157 புள்ளிகள் உயர்ந்து 8,677 புள்ளிகளாக இருந்தது. இந்த நிலையில் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் வங்கி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருவதால் சந்தை இறக்கத்தில் காணப்படுகிறது.
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 43.78 புள்ளிகள் குறைந்து 27,983.69 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 19.45 புள்ளிகள் குறைந்து 8,658.45 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
விலை அதிகரித்த பங்குகள்
பி.எச்.இ.எல் 141.90 4.19
கெயில் 442.90 3.24
சன் பார்மா 757.25 1.85
விப்ரோ 490.05 1.51
பிபிசிஎல் 665.30 1.30
விலை குறைந்த பங்குகள்
ஐசிஐசிஐ வங்கி 266,45 -1,44
டெக் மஹிந்திரா 420,00 -1,20
எம் அண்ட் எம் 1,318.80 -1,09
ஐடிசி 243,30 -1,08
டிசிஎஸ் 2,374.85 -1,06