உச்சத்தில் இந்திய சந்தை! 140 புள்ளிகள் உயர்வு
மாலை 3.30 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (20.10.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 217 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 66.51 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 216.80 புள்ளிகள் உயர்ந்து 28,201.17 புள்ளிகளாக இருந்தது. வங்கி, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.25% வரை அதிகரித்து காணப்பட்டன.
தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 64 புள்ளிகள் அதிகரித்து 8,723.10 புள்ளிகளாக இருந்தது. குறிப்பாக ஆசிய சந்தையைப் பொறுத்தவரை சீனாவின் ஜிடிபி எதிர்பார்த்ததைப்போலவே அதிகரித்து காணப்பட்டதாலும், நேற்று வர்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்தில் முடிவடைந்த காரணத்தினால் இன்றைய இந்திய சந்தை அதிகரித்து காணப்பட்டது.
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 145.47 புள்ளிகள் உயர்ந்து 28,129.84 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 40.30 புள்ளிகள் உயர்ந்து 8,699.40 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
விலை அதிகரித்த பங்குகள்
அதானி துறைமுகங்கள் 285.25 5.03
ஐசிஐசிஐ வங்கி 277.60 4.73
ஹிண்டால்கோ 155.25 2.81
ஐடியா செல்லுலார் 78.30 2.62
பார்தி இன்ப்ராடெல் 367.30 2.55
விலை குறைந்த பங்குகள்
ஹெச்சிஎல் டெக் 815,55 -1,81
ஹெச்யூஎல் 840,30 -0,67
டாடா மோட்டார்ஸ் (டி) 358.85 -0.66
டாடா மோட்டார்ஸ் 546,85 -0,66
அல்ட்ராடெக் சிமெண்ட் 4,007.10 -0,63