Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எஃப் அன்ட் ஓ எக்ஸ்பியரி.. டாடா தலைவலியால் சரிந்தது சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
உப்பு முதல் உலோகம் வரை விற்பனை செய்யும் டாடா  குழுமத்தின் அதிரடி நடவடிக்கையால் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்ததால் இன்று (25.10.16)சந்தை இறக்கத்தில் முடிவடைந்துள்ளது. 
 
 
இன்று காலை நேர வர்த்தகத் தொடக்கத்தில் இந்தியப் பங்குச் சந்தை ப்ளாட் ஆக ஓபன் ஆனது. எனினும் நேற்று டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரி அதிரடியாக நீக்கப்பட்டார். இதனையடுத்து இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடா நியமிக்கப்பட்டார். இதன் தாக்கத்தினால் இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், டாடா பவர், டாடா மோட்டர்ஸ் போன்ற டாடா குழும பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததால் சந்தை சரிந்தது. இதுமட்டுமின்றி மாதத்தின் இறுதி வியாழக்கிழமை நாளை மறுதினம் எப் அன்ட் ஓ எக்ஸ்பியரி என்பதால் முதலீட்டாளர்கள் தங்களுடைய பொசினைக் க்ளோஸ் செய்து வருவதாலும் சந்தை இறக்கத்தில் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் 87.66 குறைந்து 28,091.42 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 17.65 புள்ளிகள் குறைந்து 8,691.30 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
அதானி துறைமுகங்கள் 310.65 8.75
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,198.00 3.52
பார்தி இன்ப்ராடெல் 378.85 2.45
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,153.15 2.27
ஐசிஐசிஐ வங்கி 290.30 2.02
 
விலை குறைந்த பங்குகள்
 
டாடா ஸ்டீல் 414,75 -2,65
எம் அண்ட் எம் 1,304.00 -2,63
ஐடியா செல்லுலார் 75,20 -2,08
கெயில் 435,00 -2,04
ஹெச்யூஎல் 831,50 -1,99

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close