வாரத்தின் இறுதி நாள்.. முன்னேற்றத்தில் இந்திய சந்தை
மாலை 3.30 மணி நிலவரம்
இன்று (28.10.16) காலை நேர வர்த்தகத் தொடக்கத்தில் சந்தை இறக்கத்தில் தொடங்கியது. சென்செக்ஸ் 82.48 புள்ளிகள் குறைந்து 27,833.42 என்ற நிலையிலும், நிஃப்டி 18.60 புள்ளிகள் குறைந்து 8,596.65 என்ற நிலையிலும் குறைந்து காணப்பட்டது. அதன்பின் சென்செக்ஸ் 106 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 79 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 105.90 புள்ளிகள் சரிந்து 27,810 புள்ளிகளாக உள்ளது. வங்கி, ஐடி, தொழில்நுட்பம் மற்றும் எப்எம்சிஜி போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 0.62% வரை குறைந்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 24.60 புள்ளிகள் அதிகரித்து 8,583.10 புள்ளிகளாக இருந்தது. இந்த நிலையில் வர்த்தகத்தின் இறுதியில் ப்ளாட் ஆக முடிவடைந்தது.
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் 25.61 புள்ளிகள் உயர்ந்து 27,941.51 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃபடி 22.75 புள்ளிகள் உயர்ந்து 8,638 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
விலை அதிகரித்த பங்குகள்
டெக் மஹிந்திரா 435.65 5.20
ஜீ எண்டர்டெயின் 520.35 3.17
பஜாஜ் ஆட்டோ 2,848.10 3.14
டாடா மோட்டார்ஸ் (டி) 348.70 2.92
டாடா மோட்டார்ஸ் 537.00 2.87
விலை குறைந்த பங்குகள்
ஐசிஐசிஐ வங்கி 276,85 -2,62
பார்தி இன்ப்ராடெல் 345,65 -2,29
எய்கர் மோட்டார்ஸின் 24,020.00 -1,93
சிப்லா 575,15 -1,81