Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கண்ணுக்கு தெரிந்து கொள்ளை அடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.!

- செ.சல்மான்

இந்தியாவின் பிரபல வங்கிகளின் டெபிட் கார்ட், கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின்  விவரங்களை  சைபர் கிரிமினல்கள் களவாடி விட்டார்கள் என்ற தகவலால் வங்கி வாடிக்கையாளர்கள் ஆடிப்போயுள்ளனர். 
இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தை தங்கள் தொழிலுக்கு சாதகமானதாக மாற்றி வருகிறார்கள் சில கார்டு செக்யூரிட்டி நிறுவனங்கள்.  பிரச்சனை இல்லாத காலத்திலயே, கஸ்டமர்களிடம் நைஸாகப்பேசி ஆசை வார்த்தை காட்டி, கம்பல் பண்ணி தங்கள் தொழிலை நடத்தியவர்களுக்கு  தற்போது வங்கிகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை  தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த துவங்கியுள்ளார்கள்.
 

இது போன்ற கார்டு செக்யூரிட்டி நிறுவனத்திடம் மாட்டிக்கொண்ட அனுபவத்தை பற்றி நம்மிடம் பேசினார் மதுரையை சேர்ந்த தனியார் அலுவலக ஊழியர் ஒருவர்,  "கிராமத்துல ஒரு பழமொழி சொல்வாங்க, செத்த ஆடு கால்பணம், செம கூலி முக்காப் பணம்னு, அது மாதிரிதான் சார் பேங்க் கார்டுகள் வச்சிருக்கிறது..தனியார் பேங்குல அக்கவுண்ட் வைத்திருக்கிறேன். கிரெடிட் கார்டும்  கொடுத்தாங்க. கிரெடிட் கார்டை வாங்கினதுலருந்து ஒரே பிரச்சனைதான். அக்கவுண்டுல கூடுதலா பணம் இருக்கிறது தெரிஞ்சா கஸ்டமர் சர்வீஸ்லருந்து ஏகப்பட்ட போன் வரும். பல ஸ்கீம்கள் சொல்வாங்க. நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும். கிரெடிட் கார்டு லிமிட் கூட்டினாலோ, அதன் மூலம் லோன் வாங்கினாலோ உடனே பேங்குலருந்து பேசுறதா சொல்லி பேசுவாங்க. உங்களை சிறப்பான கஸ்டமரா செலக்ட் பண்ணியிருக்கோம். அதை பாராட்டி உங்களுக்கு ப்ரீயா ஹெல்த்கேர் பாலிஸி தர்றோம்னு சொல்வாங்க.
 
நாம ஆர்வமா தொடர்ந்து கேட்டால், ரெண்டு மாசம் நீங்க பணம் கட்ட தேவையில்லை, மீதி பத்து மாதத்துக்கு மட்டும் பணம் கட்டினால் போதும், அதுவும் கையிலிருந்து கொடுக்க வேண்டாம், உங்க கிரெடிட் கார்டுல எடுத்துக்கிறோம்னு  பேச்சுலயே மடக்கி வருடத்துக்கு பத்தாயிரம், இர்பதாயிரம்னு  ஹெல்த்கேர் பாலிஸியை போட வச்சிருவாங்க. 
உங்களை உம் சொல்ல வச்ச அடுத்த செகண்டுல  கிரெடிட்கார்டு பணத்தை எடுத்துடுவாங்க. உங்களுக்கு இந்த பாலிஸி தேவையா இல்லையான்னு கூட யோசிக்க விட மாட்டாங்க. ஆனா, கடன்காரனா ஆக்கிடுவாங்க. இதைவிட நல்ல பாலிஸி, கம்மியான விலையில வெளியில கிடைக்கும். ஆனா, உங்கள யோசிக்கவே விட மாட்டாங்க. எனக்கும் அப்படித்தான் பொய்யான தகவல்களை கூறி வருடத்துக்கு 12 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பாலிஸியை போட்டு டாகுமெண்ட் அனுப்பிட்டாங்க. 
 
தொடர்ந்து போராடி, பல மெயில் அனுப்பி அந்த பாலிஸியை கேன்சல் செய்ய வச்சேன். நாம இஷ்டப்பட்டுத்தான் எந்த பாலிஸியும் எடுக்கனும், கம்பல் பண்ணக் கூடாதுல்ல, இதுமாதிரிதான் ஒருநாள்  "ஒன்அசிஸ்ட் "   என்ற கம்பெனிக்காரங்க லைன்ல வந்தாங்க.(இது மாதிரி நிறைய நிறுவனங்கள் உள்ளன.) டெபிட் கார்டு, கிரெடிட் கார்டை  இனிமேல் ரிஜிஸ்டர் பண்ணனும், இது பேங்கோட புது ரூல்,  எங்கள் நிறுவனத்துல ரிஜிஸ்டர் செய்தால் உங்களுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். 
 
உங்க கார்டை யாரும் மிஸ்யூஸ் பண்ண முடியாது. தொலைஞ்சு போனால் உடனே வேறு கார்டு கிடைக்கும். ஏடிஎம் ல பணம் வரலைன்னு எங்க நம்பருக்கு போன் செய்தால் எங்கள் ஆள் மூலம் நீங்க இருக்கிற இடத்துக்கு பணம் வந்து சேரும், இதுக்கு ரெண்டு வருடத்துக்கு ரொம்ப குறைச்சலான சர்வீஸ் சார்ஜ்தான், அதுலயும் உங்களுக்கு ஆஃபர் வந்திருக்குன்னு என்னன்னவோ சொன்னாங்க. ரெண்டு வருடத்துக்கு ஆயிரம் ரூபாய்னு சொன்னதும் நானும் அசந்துபோய் சரின்னுட்டேன். அடுத்த செகண்ட்  என்னோட கிரெடிட் கார்டு அக்கவுண்டுலருந்து நாலாயிரம் ரூபாயை எடுத்துட்டாங்க. என்னால ஜீரணிக்க முடியலை. பொய் சொல்லி  பணத்தை எடுத்துட்டாங்க.
 
இது பெரிய சீட்டிங், எனக்கு கடுப்பாயிடுச்சு, உடனே பேங்கோட கஸ்டமர் கேருக்கு போன் செஞ்சு கேட்டா, ஒன் அசிஸ்ட் நிறுவனத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லனு சொன்னாங்க. சம்பந்தமில்லேன்னா, என்னோட அக்கவுண்ட் நம்பர், போன் நம்பர் அவங்களுக்கு எப்படி தெரியும் ? நான் விடலை, அந்த ஒன் அசிஸ்ட்டுக்கே பேசினேன், ஆஃபர்னு சொல்லிட்டு எப்படி நாலாயிரம் எடுக்கலாம்னு கேட்டதுக்கு, உங்க நல்லதுக்குத்தானே, உங்க ஓட்டர் கார்டு, ஆதார் கார்டு நம்பரை கூட ரிஜிஸ்டர் பண்னலாம்.  அது தொலைந்து போனாலும் புது  வோட்டர் கார்டு, ஆதார் கார்டு தருவோம்னு சொன்னாங்க.
 
முப்பது ரூவா கொடுத்தா நம்ம ஊர் இ-சேவாவுல புது கார்டு வாங்கலாம். இதுக்கு ஏன் இவ்வளவு செலவு பண்ணனும், எனக்கு உங்க செக்யூரிட்டி வேண்டாம்னு சொன்னேன். என் பணத்தை ரீஃபண்ட் பண்னுங்கன்னு சொல்லியும் அவங்க கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னாங்க.
 
நான் ஒம்புட்ஸ்மேன்கிட்டே கம்ப்ளைண்ட் பண்ணுவேன்னு சொன்னதும் ரெண்டு வருஷம்கிறதை குறைச்சு ஒரு வருடத்துக்கு ரெண்டாயிரம் எடுத்துக்கிட்டாங்க. சரி இந்தளவுக்காவ்து தப்பிச்சோம்னு நினைச்சேன்.  ஆனா, நான் எந்த கார்டையும் ரிஜிஸ்டர் பண்ணல, அவங்க மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு. இது மாதிரி எத்தனை பேர்கிட்டே  பறிச்சாங்களோ, பல பேர் பணம் போனாலும் கூச்சப்பட்டுக்கிட்டு கேட்கிறதே இல்லை.  
 
நம்மளை மாதிரி சாதாரண ஆளுங்களுக்கு, கார்டு செக்யூரிட்டியெல்லாம் தேவையில்லாத விஷயம். அதிகமா பணப் பரிமாற்றம் செய்றவங்க வேணும்னா தங்களோட எல்லா கார்டையும் ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம். அதுல ஒரு நியாயம் இருக்கு.
 
இப்படி பிரைவேட் வங்கியில கணக்கு வச்சிருக்கிறவங்களின் விவரங்களை தெரிஞ்சுகிட்டு, ஆசை வார்த்தை காட்டி,  டார்ச்சர் பண்ணி பிரயோஜனமில்லாத  இன்ஷூரன்ஸ், கார்டு செக்யூரிட்டினு போட வச்சு கொள்ளை லாபம் பார்க்குற நிறுவனங்கள் மேல முதல்ல நடவடிக்கை எடுக்கனும்" என்றார்.
 டெபிட், கிரெடிட் கார்டுகளை யாரும் மிஸ்யூஸ் செய்யாமல் அவைகளை நமக்கு வழங்கும் வங்கிகள்தான் பாதுகாக்க வேண்டும். அதன் பாதிப்புக்கு ஈடு செய்ய வேண்டும்.
 
இதில் ஏன் இன்னொரு நிறுவனம் தலையிட வேண்டும். ஒன்று,அந்த நிறுவனத்துக்கும் வங்கிக்கும் தொடர்பு இருக்க வேண்டும் அல்லது வங்கியின் சார்பு நிறுவனமாக அது இருக்க வேண்டும்.
 
கண்ணுக்கு தெரியாத சைபர் கிரிமினல்களை விட, கண்ணுக்கு தெரிந்து ஏமாற்றும் இந்த கார்பரேட்காரர்களுடமிருந்து வங்கி வாடிக்கையாளர்களை ஆர்.பி.ஐ. காப்பாற்ற வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close