Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2016-ம் ஆண்டில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு முதலீடு!

 
சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்று தீர்மானிக்க முடியாத நிலையில் சந்தை தொடர்வதே ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு குறையக் காரணம்.  தற்போதைய நிலையில் ஈக்விட்டி ஃபண்ட்கள் மூலம்  கிடைக்கும் வருமானமும் (7% முதல் 11%)முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் இல்லை. இவற்றால் முதலீட்டாளர்கள் ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. 
 
கடந்த 2015-ம் ஆண்டு ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ. 90,603 கோடி. ஆனால் இந்த 2016-ம் ஆண்டு அது பாதியாகக் குறைந்து ரூ.44,772 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது. மாறாக, முதலீட்டாளர்கள் குறைவான ரிஸ்க்குடன் கணிசமான வருமானம் (8% முதல் 16%) தரக்கூடிய கடன் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.  
 
அதே சமயம், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு ஃபோலியோக்கள் அதிகரித்துள்ளன. 2015-16 நிதி ஆண்டில் மொத்தமாக 59 லட்சம் ஃபோலியோ கணக்குகள் தொடங்கப்பட்டன. 2014-15-ல் 22 லட்சம் ஃபோலியோக்கள் மட்டுமே தொடங்கப்பட்டன. 
 
ஆனால் 2016-17 நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலகட்டத்தில் மட்டுமே 44 லட்சம் புதிய ஃபோலியோ கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்டில் புதிதாக முதலீடு செய்வோர் அதிகரித்துள்ளதையே, அதுவும் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது. தற்போது மொத்தமாக 5.2 கோடி மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோ கணக்குகள் உள்ளன.


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close