Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறக்கத்தில் முடிவடைந்த இந்திய பங்குச் சந்தை!

 
மாலை 3.30 மணி நிலவரம்
 
இன்று (20.3.17) காலை நேர வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்த காரணத்தினால் சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்து காணப்பட்டது. ஐடி, டெக், மெட்டல், வங்கி, ஆயில் மற்றும் எரிவாயு போன்ற துறை சர்ந்த பங்குகள் சரிவடைந்து காணப்பட்டது. கடந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து காணப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை குறைத்து லாப நோக்கம் கருதி விற்பனை செய்ததால் சந்தை குறைவடைந்து காணப்பட்டது.
 
 
இந்த நிலையில் வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 130 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்து முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே ஐடியா மற்றும் வோடஃபோன் இணைப்பு நடவடிக்கையால் ஐடியா நிறுவன பங்குகள் அதிக ஏற்றத்தை சந்தித்தது. இன்றைய வர்த்தகத்தில் 15 சதவிகிதத்துக்கும் அதிகமாக வர்த்தகமானது. எனினும் ஒட்டுமொத்தமாக முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்த காரணத்தினால் சந்தை சரிவடைந்து காணப்பட்டது. சந்தையில் ஆக்ஸிஸ் வங்கி, இன்போசிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி பங்குகள் அதிக இறக்கத்தைச் சந்தித்தது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃபடி 33.20 புள்ளிகள் குறைந்து, 9,126.85 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 130.25 புள்ளிகள் குறைந்து 29,518.74 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
அரவிந்தர் ஃபார்ம் 704.90 
கிராஸிம் 1,062.45
எய்கர் மோட்டார்ஸின் 25,099.30 
பி.எச்.இ.எல் 170.90 
டாடா பவர் 87.15 
 
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார் 97.0 
ஆக்சிஸ் வங்கி 502.85 
ஐசிஐசிஐ வங்கி 275.5 
டிசிஎஸ் 2,480.00 
இன்போசிஸ் 1,021.50 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close