Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்டார்ட்அப் - வெற்றி ரகசியங்கள்..!

ஸ்டார்ட்அப் - வெற்றி ரகசியங்கள்..!
 
இது ஸ்டார்ட்அப்-களுக்கான காலம். இளைஞர்கள் பலர் தொழில்முனை வோர்களாக விஸ்வரூபம் எடுத்துவருகின்றனர். புத்தும்புது ஐடியா, அதை நடைமுறைப்படுத்தத் தொழில்நுட்பம் தெரிந்தால்போதும்; யார் வேண்டுமானாலும் தொழில்முனைவோராக முடியும்.
 
 
இன்றைக்கு ஃப்ளிப்கார்ட்டைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. ஐ.ஐ.டி-யில் படித்த சச்சின் மற்றும் பின்னி பன்சால், அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். அந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவில் செயல்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சி இன்றைக்கு ஆன்லைன் ஷாப்பிங்கில் அவர்களை மிகப்பெரிய ஜாம்பவானாக மாற்றியிருக்கிறது.
 
இன்றைக்குப் பலரும் மிகவும் வித்தியாசமான, ஆனால் உபயோகமான ஐடியாக்களுடன் வருகின்றனர். பலர், தங்களுக்குத் தெரிந்ததை வைத்துப் பிசினஸ் மாடலை உருவாக்குகின்றனர். இருப்பினும், அதை முன்னெடுத்துச் செல்ல, பெரிய அளவில் மக்களைச் சென்றடைவது எப்படி என்று தெரியாமல் இருக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில், சி.ஐ.ஐ தமிழ்நாடு கிளையானது, ‘ஸ்டார்ட்அப் பிரீனர்-2017’ என்ற கருத்தரங்கை நடத்தியது. இந்தக் கருத்தரங்கில் தொழிலதிபர்களும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி வருபவர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். 
 
 ஸ்டார்ட்அப் வேர் ஹவுஸ்
 
இந்தக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசினார் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார். “கோயம்புத்தூரிலும், சென்னையில் இருப்பது போன்ற தொழில் தொடங்குவோர் மையம் 
(Startup Ware House) ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இது, தொழில் தொடங்குவோருக்கு மிகுந்த உதவியாக இருக்கும். தொழில் துவங்குவதற்குத் தேவையான அனுமதிகளையும், ஒப்புதல்களையும் ஒற்றைச் சாளர முறைப்படி (Single Window System), இணையதளம் மூலம் பெறும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  இந்த அனுமதிகளை விரைவில் வழங்க தலைமைச் செயலாளர் தலைமையின் கீழ் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
 
இந்தக் கருத்தரங்கில் அடுத்துப் பேசினார் சி.ஐ.ஐ தமிழ்நாடு முன்னாள் தலைவரும் டி.வி.எஸ் கேப்பிட்டல் ஃபண்ட்ஸ் லிமிடெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கோபால் னிவாசன். “ஸ்டார்ட்அப் கொள்கையைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும். தெலங்கானா மாநிலத்தில் உள்ளதுபோல, இங்கும் ஸ்டார்ட்அப் கொள்கைகள் இருந்தால், அதன் மூலம் அதிக அளவில் ஸ்டார்ட் அப்கள் உருவாக வாய்ப்பாக இருக்கும்” என்றார்.
 
இந்தக் கருத்தரங்கில் பேசிய ‘ரீடிஃபைன் இமேஜ்’ ஏக்தா சுரானாவின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது.  “என் மகன் சிறுவனதான். அவன் தன் நண்பர்களுடன் இணைந்து லெமன் ஜூஸ் விற்பனை செய்யப்போவதாகவும், அதற்குப் பணம் வேண்டும் என்றும் கேட்டான். ‘‘ஏன் லெமன் ஜூஸ் விற்பனையை தேர்வு செய்தாய்’’ என்று கேட்டேன். அதற்கு அவன், ‘‘நம் தெருவில், உணவு விற்பனை செய்யும் கடைகள் பல உள்ளன. ஆனால், குளிர்பானம் விற்பனை செய்யும் கடை எதுவும் இல்லை’’ என்றான். அவன் ஐடியா என்னை ‘வாவ்’ சொல்ல வைத்தது. பணத்தை எப்படிப் பயன்படுத்தப் போகிறாய் என்று கேட்டன். பலூன், சில்வர் பாத்திரம் என்று பெரிய பட்டியலை வாசித்தான். அவை ஒவ்வொன்றுக்கும் அவன் காரணமும் வைத்திருந்தான். அவன் சொன்ன பதில் ஒவ்வொன்றுக்கும் ‘வாவ்’ சொல்லும் வகைகள்தான். இதுபோலத்தான், எந்த ஒரு தொழிலைத் தொடங்குவதாக இருந்தாலும், அதன் வடிவமைப்பு, பிசினஸ் மாடல், டெக்னாலஜி என்று ஒவ்வொன்றும் ‘வாவ்’ சொல்ல வைக்கவேண்டும்’’ என்றார்.
 
இந்த மாநாட்டில் இன்னும் பல தொழில்முனைவோர்கள் பேசினார். அது பற்றி முழுமையாக படிக்க நடப்பு இதழ் (ஏப்ரல் 23, 2017 கடைகளில் கிடைக்கும்) நாணயம் விகடன் படியுங்கள்.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close