Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

 
இந்த வாரம் ரப்பர், சீரகம், மஞ்சள், சோயாபீன் எப்படி வர்த்தகமாகும் என்பதை செலிப்ரஸ் கேப்பிடல் லிமிடெட் நிறுவனத்தின் தமிழ்நாடு, உதவி துணைத் தலைவர் லிஜோ ஜோசப் விளக்குகிறார். 
 
 
 
ரப்பர்! 
 
என்சிடிஇஎக்ஸ் சந்தையில் இந்த வாரமும் ரப்பர் ஜூலை மாத கான்ட்ராக்ட் நெகட்டிவ் ஆக வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய வாரம் ரப்பர் விலை 6 சதவிகிதம் சரிவடைந்து இருந்தது. இது இந்த ஆண்டின் அதிக சரிவு ஆகும். ரப்பர் விலை தற்போதைய நிலையில் இருந்து கீழே குறைந்து இந்த வாரம் 11,200 ரூபாய் வரை மேலும் சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய காலத்தில் முன்கூட்டியே பருவமழை மற்றும் உற்பத்தி அதிகரிப்பு போன்ற காரணங்களால் இதன் விலையில் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம். இதுமட்டுமின்றி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட உள்ளதால் டீலர்ஸ் மற்றும் வியாபாரிகள் ரப்பர் கையிருப்பை வெகுவாக விற்பனை செய்ய முன்வந்துள்ளனர். 
 
மஞ்சள்! 
 
என்சிடிஇஎக்ஸ் சந்தையில் மஞ்சள் ஜூலை மாத கான்ட்ராக்ட் இந்த வாரமும் நெகட்டிவ் ஆக வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஞ்சள் விலை தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவடைந்து வர்த்தகமாகி வருகிறது. குறுகிய காலத்தில் மஞ்சள் விலை மேலும் குறைவடைந்து ரூ.4,750 க்கு சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் மஞ்சள், ஸ்டாப் லாஸ் ரூ.5,570 என்ற நிலையில் வைத்துக் கொண்டு விற்பனை செய்யலாம். அதேசமயம் மஞ்சள் விலை ரூ.5,800ஐ தாண்டி வர்த்தகமாகும் போது இதன் விலையில் ஏற்றத்தைக் காணலாம். எனினும் கடந்த சில தினங்களாக உற்பத்தி பகுதிகளில் இருந்து அதிக வரத்து மற்றும் தேவை குறைவு போன்ற காரணங்களால் மஞ்சள் விலை சரிவடைந்து காணப்படுகிறது. 
 
சோயாபீன்! 
 
என்சிடிஇஎக்ஸ் சந்தையில் சோயாபீன் ஜூலை மாத கான்ட்ராக்ட் இந்த வாரம் நெகட்டிவ் ஆக வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோயாபீனைப் பொறுத்தவரை இதன் சப்போர்ட் நிலையான ரூ.2,850ஐ உடைத்து அதற்குக் கீழே வர்த்தகமாகி வருகிறது. வரும் நாள்களில் சோயாபீன் அடுத்த சப்போர்ட் நிலையான ரூ.2,550 முதல் ரூ.2,500 வரை எட்ட வாய்ப்புள்ளது. முதலீட்டாளர்கள் ரூ.2,900 என்ற நிலையில் ஸ்டாப் லாஸ் வைத்துக் கொண்டு சோயாபீனை விற்பனை செய்யலாம். 
 
சீரகம்! 
 
என்சிடிஇஎக்ஸ் சந்தையில் சீரகம் ஜூலை மாத கான்ட்ராக்ட் இந்த வாரம் நெகட்டிவ் ஆக வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீரகத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் தொடர்ந்து இறக்கத்தைச் சந்தித்து வரும் வாரங்களில் ரூ.16,600 என்ற இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீரகத்தின் சப்போர்ட் லெவல் ரூ.17,500 என்ற நிலையில் இருக்கிறது. இதை உடைத்து கீழே வர்த்தகமாகும் பட்சத்தில் முதலீட்டாளர்கள் ஷார்ட் பொசிஷனை எடுக்கலாம். அதேசமயம் சீரகத்தின் ரெசிஸ்டன்ஸ் லெவல் ரூ.18,000 என்ற லெவலில் இருக்கிறது. 
 
சோ.கார்த்திகேயன் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close