Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெட்ரோல், டீசல் விலை தினசரி மாறுவதால் பெட்ரோலிய பங்குகள் உயர்ந்தது!

 
மாலை 3.30 மணி நிலவரம்
 
இன்றைய வர்த்தகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாறுவது அமலுக்கு வந்துள்ளதால் அரசுக்கு சொந்த பெட்ரோலிய நிறுவனங்களான ஐஓசி, பிசிபிஎல் மற்றும் எச்பிசிஎல் போன்ற நிறுவனங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற நிறுவன பங்குகள் சரிவடைந்திருக்கின்றன.  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து காணப்படுகிறது. இதனால் வாரத்தின் இறுதிநாளான இன்று இந்திய பங்குச் சந்தை தடுமாற்றத்துடன் வர்த்தகமானது. 
 
 
காலையில் அதிகரித்து காணப்பட்ட சந்தை, வர்த்தகத்தின் இறுதியில் ஏற்ற, இறக்கத்துடன் ஃபிளாட் ஆக நிறைவடைந்தது. ஹெல்த்கேர் மற்றும் ஐடி நிறுவன பங்குகள் விற்பனையால் நிஃப்டி நிலைகுலைந்து இறுதியில் 10 புள்ளிகள் உயர்வுடன் நிறைவுற்றது. சந்தையில் ஐடிசி, டாடா மோட்டார்ஸ், கெயில், என்டிபிசி, லுபின், டாக்டர் ரெட்டிஸ், விப்ரோ, சிப்லா, சன் பார்மா போன்ற நிறுவனத்தின் பங்குகள் அதிகரித்து காணப்பட்டன. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 10.00 புள்ளிகள் உயர்ந்து 9588.05 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 19.33 புள்ளிகள் குறைந்து 31056.40 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா மோட்டார்ஸ் (டி) 282.35 
கோடக் மஹிந்திரா 982.65 
அல்ட்ரா டெக் சிமென்ட் 4,125.30 
டாடா மோட்டார்ஸ் 455.75 
ஏசிசி 1,638.60 
 
விலை குறைந்த பங்குகள்
 
லுபின் 1,131.05 
சன் பார்மா 529.15
சிப்லா 536.75 
விப்ரோ 255.25 
இன்போசிஸ் 940.25 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close