Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வளமான வாழ்க்கை - முதலீட்டாளர்களுக்கு இந்த மூன்றும் மிக முக்கியம்..!

 வளமான வாழ்க்கை -

முதலீட்டாளர்களுக்கு

இந்த மூன்றும்  மிக முக்கியம்..!

நாணயம் விகடன் மற்றும் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து, திருச்சியில்‘மியூச்சுவல் ஃபண்ட், செல்வத்தைப் பெருக்கும் முதலீடு’ என்கிற தலைப்பில் முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. 

அரங்கம் நிறைந்த அந்த நிகழ்ச்சியில் முதலில் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழகத் தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி பேசினார். அவர் மியூச்சுவல் ஃபண்டின் முக்கியத்துவம் குறித்தும், அதன் அடிப்படைகள் குறித்தும் விரிவாக எடுத்துச் சொன்னார். மேலும், ஒவ்வொருவரும் தங்களது முதலீடுகளை எப்படித் திட்டமிட வேண்டும், எவரையும் எதிர்பார்க்காமல் நிதி சுதந்திரத்துடன் எவ்வாறு வாழ்வது என்பது குறித்து விளக்கினார். முதன்முறை மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்பவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் அனைத்தையும் விரிவாக விளக்கினார்.
 
 அடுத்ததாகப் பேசிய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் (முதலீட்டாளர் கல்வி) எஸ்.குருராஜ், ``நாம் சிறுவயதிலிருந்தே என்ன படிக்கலாம், எந்தத் துறையில் வேலைக்குப் போகலாம் என்று யோசிக்கத் தொடங்கிவிடுகிறோம். ஆனால், சேமிப்பையும் முதலீட்டையும் பற்றி யோசிக்க மறந்துவிடுகிறோம். நாம் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயின் மதிப்பும் எதிர்காலத்தில் உயரும். எனவே, எவ்வளவு சீக்கிரம் நம்முடைய முதலீடுகளைத் திட்டமிடுகிறோமோ அவ்வளவு நல்லது. சேமிப்பு, இன்ஷூரன்ஸ் மற்றும் முதலீடு ஆகிய மூன்றும் ஒருவரிடம் கட்டாயம் இருக்கவேண்டியவை" என்று பேசினார். 
சிறப்புரை ஆற்றிய முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ‘‘நாளுக்கு நாள் நம்முடைய வாழ்க்கைமுறை மாறிவருகிறது;  செலவுகள் அதிகரித்து வருகின்றன. எதிர்காலத்தில் நம்முடைய தேவைகள் பலமடங்கு அதிகரிக்கலாம். அவற்றைச் சமாளிக்க நம்மிடம் போதுமான அளவு பணம் இருக்கவேண்டுமல்லவா? நிதிச்சுமை இல்லாத வாழ்க்கையை நடத்த `நாளைக்கான இன்றைய முதலீடு' என்பது மிகவும் அவசியம். தங்கமும் ரியல் எஸ்டேட்டும் வருமானம் தரும் நிலையில் தற்போது இல்லை. நம்முடைய முதலீட்டில் அதிக லாபம் பெற சிறந்த வழி மியூச்சுவல் ஃபண்ட். இதில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம், வரிச்சலுகையுடன் கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்டில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்" என்று பேசினார்.
 
நிகழ்ச்சியின் இறுதியாக முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் நிபுணர்கள் பதில் அளித்தனர்.

- ஜெ.சரவணன்

படங்கள்: தே.தீட்சித்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close