Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பங்குச் சந்தை முதலீட்டில் லாபம் பார்க்கும் சூட்சுமம் இதுதான்..!

பங்குச் சந்தை முதலீட்டில்
லாபம் பார்க்கும் சூட்சுமம் இதுதான்..!
 
 - சேனா சரவணன்
 
சர்க்கரை விலை உயர்ந்தால், அதன் பயன்பாட்டை வீட்டில் குறைத்து பர்ஸ்-ன் கனம் குறைவதை காப்பாற்ற வேண்டும்.
 
அதேநேரத்தில், சர்க்கரை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். அது லாபகரமாக அமையும். காரணம், சர்க்கரை விலை உயர்வால் சர்க்கரை ஆலை நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும். அது பங்கின் விலையை அதிகரிக்கும்.  
 
ரிசர்வ் பேங்க் ஆஃப்  இந்தியா (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தை குறைத்தது. இது நல்ல விஷயம்தான்.  ஆனால், 2017 ஆகஸ்ட் 2 ம் தேதி, ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை 0.25% குறைத்தது. ஆனால்,  பிஎஸ்இ -ன் சென்செக்ஸ் 98 புள்ளிகள் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக  ஆகஸ்ட் 3 ம் தேதியும் சந்தை இறக்கத்தில் வர்த்தகமானது. ஒரு நல்ல விஷயத்துக்கு ஏன் சந்தை இறக்கம் கண்டது.   
 
ஆர்பிஐ ரெப்போ வட்டியை குறைந்ததால், வங்கிகள் வீட்டுக் கடன், கார் கடன் போன்றவற்றுக்கான வட்டியை குறைக்க வேண்டி வரும். இதனால், அவற்றின் லாபம் குறையும். இதனை தொடர்ந்து அவற்றின் பங்கு விலை குறையும். இதனால், தான் வங்கிப் பங்குகளின் விலை குறைந்து சந்தை (சென்செக்ஸ்) புள்ளிகள் இறக்கம் கண்டன.
 
அண்மையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), அதன் சேமிப்பு கணக்கில் ரூ. 1 கோடிக்கு கீழ் வைத்திருப்பவர்களுக்கான ஆண்டு வட்டியை 4 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகிதமாக குறைத்தது. எஸ்பிஐ வங்கியில் 90% சேமிப்பு கணக்குகளில் ரூ. 1 கோடிக்கு கீழ் இருப்பு இருப்பதால், அவர்களுக்கு 0.5% வட்டி குறைவாக கிடைக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு பாதகமான செய்தி. ஆனால், வங்கிக்கு சாதகமான செய்தி, இந்த 0.5% வட்டி குறைப்பு மூலம் எஸ்பிஐ-க்கு ஆண்டுக்கு சுமார் ரூ.4,200 கோடி லாபம். அதனால், அந்த வங்கியின் பங்கு விலை ஒரே நாளில் 4.5 சதவிகிதம் அதிகரித்தது. 
 
இது போன்ற எதிர்மறை விஷயங்களை புரிந்துக் கொண்டால், பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை.     
 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close