Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனப் பங்குகள் ஏற்றம்..!

எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனப் பங்குகள் ஏற்றம்..! 
 
ஐஓசி, ஹெச்பிசிஎல் இரண்டும் கடந்த ஒரு மாதத்தில் முறையே 26% மற்றும் 23% ஏற்றம் கண்டிருக்கின்றன. கடந்த சில வர்த்தக நாட்களில் மட்டுமே 5% மற்றும் 4% ஏற்றம் கண்டன. மேலும் பிபிசிஎல்ல் மற்றும் எம்ஆர்பிஎல் ஆகிய இரண்டு பங்குகளும் கூட முறையே 4% மற்றும் 9% ஏற்றம் கண்டிருக்கின்றன. இப்படி ஆயில் ரிஃபைனரி நிறுவனப் பங்குகள் ஏற்றமடைவதற்கு காரணம் எண்ணெய் சப்ளையானது பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதுதான். 
 
 
ஏனெனில் அமெரிக்க வளைகுடா பகுதிகளில் ஹார்வே சூறாவளி தாக்கியதால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ரோட்டர்டமில் உள்ள ஷெல் பெர்னிஸ் ரிஃபைனரில் விபத்து நடந்திருக்கிறது. இந்தக் காரணங்களால் எண்ணெய் விநியோகமானது பாதிக்கப்படலாம். 
அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய எண்ணெய் நிறுவனங்களின் லாபமும் 36 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இந்தக் காரணங்களால் அவற்றின் பங்கு விலை ஏற்றம் கண்டன.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close