Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கரூர் வைஸ்யா வங்கியின் எம்.டி மற்றும் சீ.இ.ஒ வாக சேஷாத்ரி பொறுப்பேற்றார்.

 
கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பி.ஆர்.சேஷாத்ரி இன்று பொறுப்பேற்றார். 
 
 
கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக, 2011 ஜூனில் இருந்து 2017 ஆகஸ்ட் 31-ம் தேதி வரை என 75 மாதங்கள் கே. வெங்கடராமன் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் இவர் பதவி விலகியதையடுத்து பி.ஆர்.சேஷாத்ரி இன்று பொறுப்பேற்றுள்ளார். 
சேஷாத்ரி, வங்கியில் வர்த்தக மற்றும் சில்லறை வங்கி ஆகியவற்றில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் வாய்ந்த மூத்த வங்கியாளரர் ஆவார். சிட்டி பேங்க்-ல் 1992-ம் ஆண்டு தனது வங்கித் தொழிலை தொடங்கினார். அதன் பின் ட்டி ஃபைனான்சியல் கன்ஸ்யூமர் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் சிட்டி ஃபைனான்சியல் ரீடெய்ல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 2005-ம் வரை நிர்வாக இயக்குநராகப் பணிபுரிந்தார். சிட்டி பேங்க்-ன் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் கடன் வணிகங்களின் பிராந்திய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக 2005-ல் இருந்து சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தவர். இப்போது, கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பி ஆர் சேஷாத்ரி இன்று பொறுப்பேற்றுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close