Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அக்ரி கமாடிட்டி

தி.ரா.அருள்ராஜன்கமாடிட்டி சந்தை பயிற்சியாளர் மற்றும் நிபுணர் www.ectra.in

 

அக்ரி கமாடிட்டி:

மென்தாயில்:

மென்தாயில், தொடர்ந்து நல்ல லாபம் கொடுக்கும்  வாய்ப்பை நாம் ஆராய்ந்து கொடுத்து வருகிறோம்.

முந்தைய வாரம் நல்ல லாபத்தை கொடுத்தது என்று பார்த்தோம். ஆனால், சென்ற வாரமோ, ஒரு படி மேலே போய், ஒரு படி அல்ல பல படி மேலே போய் மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளது.

இப்படிபட்ட வாரம் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டுமுறையோதான் வரும் என்று நம்புகிறேன்.

மென்தாயில் பற்றி சென்ற வாரம் சொன்னது.

" 2013 ஏப்ரல் மாதத்தில் இருந்து பார்க்கும்போது, கடந்த நான்கு வருடங்களின் புதிய உச்சத்தை தோற்றுவித்துள்ளது. அதேபோல் இது மாத வரைபடத்திலும் வலிமையான பிரேக்அவுட் ஆகி உள்ளது. இனி, நாம் முன்பு தடைநிலையாக சொன்ன 1270 மிக முக்கிய ஆதரவாக மாற வாய்ப்புள்ளது. அடுத்து மேலே உடனடி தடைநிலை 1335 மற்றும் 1385 ஆகும். அதையும் தாண்டும்போது மிகப்பெரிய ஏற்றங்கள் வரலாம்."

நாணயம் விகடன் வாசகர்களுக்கு  தொடரந்து வாரத்திற்கு  வாரம் மென்தாயில் நல்ல லாபம் சம்பாதிக்கும் வாய்ப்பை கொடுத்து வருகிறது. குறிப்பாக சென்ற வாரம் போல் இன்னொரு வாரம் அமையுமோ என்பது கேள்விக்குறியே.

 சென்ற இதழில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு இருந்தேன். அதை உங்களுக்கு திரும்பவும் நினைவுபடுத்துகிறேன்

'நாம் அவ்வப்போது பாடம் கற்றுக்கொண்டேதான் இருக்கவேண்டும். அதாவது, தடைநிலையை உடைத்து ஏறினால் பலமான ஏற்றம் வரலாம் என்பதே ஆகும். அது மென்தாயில் விலை நகர்வில் கண்கூடாக பார்த்துவிட்டோம்.'

சென்ற வாரம் நாம் கற்ற இந்தப் பாடத்தை நாம் மறக்காமல் பயன்படுத்தி இருந்தால் அது மிகப் பெரிய, மிக மிகப் பெரிய லாபத்தை கொடுத்து இருக்கும். சென்ற வாரம் திங்கள் அன்று 1270 என்று நாம் கொடுத்து இருந்த தடைநிலையை தாண்டி ஏற ஆரம்பித்தது. அது ஒரு தடைநிலை அல்லவா! அவ்வளவு எளிதில் கரடிகள் அதை தாண்டவிடுவார்களா? மீண்டும் அன்றே அதை இறக்கினார்கள். அந்த இறக்கமானது, சரியாக நாம் கொடுத்த எல்லையான 1270 என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கிருந்து காளைகள் விலையை மேலே எடுத்து சென்று 1311ல் முடித்தார்கள்.

தி.ரா.அருள்ராஜன்கமாடிட்டி சந்தை பயிற்சியாளர் மற்றும் நிபுணர் www.ectra.in

 

ஆனால், அடுத்த நாள் செவ்வாய் அன்று, கரடிகள் மீண்டும் விலையை இறக்க முயற்சித்தார்கள். விலை இறங்கி 1275வரை வந்தது. ஏற்கெனவே, இது காளைகளின் முக்கிய எல்லை என்று குறிப்பிட்டு இருந்தேன்.

மீண்டும் காளைகள் மென்தாயில் விலையை ஏற்றினால், 1350 என்ற புள்ளியையும் தொட்டது. ஆனால் அங்கு நிறுத்தமுடியவில்லை. கரடிகள் மீண்டும் விலையை இறக்கி 1304ல் முடித்தார்கள். இந்த இரண்டு நாளும் காளைகளும், கரடிகளும் வலிமையாக சண்டை போட்டார்கள்.

புதன் அன்று, வால்யூமை கூட்டினார்கள். விலையை 1323ல் துவக்கினார்கள், முடிவில் 1365ல் முடித்தார்கள். அடுத்து வியாழன் அன்று 1369ல் துவங்கினார்கள், கொஞ்சம் இறங்கவிட்டாலும், முடிக்கும்போது 1419ல் முடித்தார்கள்.

வெள்ளி அன்று இன்னும் ஏற்றி 1474ஐ தொட்டு 1360ல் முடித்துள்ளார்கள். கரடிகளை ஷாட் கவரிங் செய்யவைத்து பெரிய வெற்றியை ஈட்டினார்கள்.

இனி என்ன செய்யலாம்?

மென்தாயிலின் இந்த நகர்வு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகர்வு ஆகும். மிகப்பெரிய ஏற்றத்திற்கு பிறகு ஒரு ரிடிரேஸ்மென்ட் வரலாம். அதற்கு முன்பு கடைசியாக ஒரு முறை காளைகள் விலையை 1570வரை கூட எடுத்து சொல்லலாம். அதன் பின் கரெக்ஷன் வரலாம்.

அப்படி நடந்தால், 1415, 1379, 1350 என்பது முக்கிய ஆதரவு எல்லைகள்.

காட்டன்:

காட்டன் சென்ற வாரம் பொஷிஷன் டிரேடர்களுக்கு ஒரு ஷாக் கொடுத்த வாரமாக முடிந்துள்ளது.

காட்டன் பற்றி சென்ற வாரம் சொன்னது:

" தற்போது நல்ல ஏற்றத்திற்கு பிறகு ஒரு பக்கவாட்டு நகர்வில் உள்ளது. இதனால், முக்கிய ஆதரவாக 18900 என்ற எல்லை உள்ளது. மேலே 19100 என்பது உடனடி தடைநிலையாக உள்ளது. இதில் எந்த எல்லையை உடைக்கிறதோ, அந்த திசையில் தொடர்ந்து வியாபாரம் செய்யலாம்."

திங்கள் மற்றும் செவ்வாய் அன்று நாம் கொடுத்துள்ள இரண்டு எல்லைக்குள்ளாகவே வியாபாரம் ஆனது, கொஞ்சம் மேலும் கீழும் நகர முற்பட்டாலும், அது மீண்டும் இந்த இரண்டு எல்லைகளுக்குள்ளாகவே முடிந்தது.

ஆனால், புதன் அன்று, காட்டன் விலை பெரிய கேப் டவுனில் துவங்கியது. செவ்வாய் அன்று 19060 என்ற விலையில் முடிந்து இருந்தாலும், புதன் அன்று காலை 18180ல் துவங்கியது. கிட்டத்தட்ட 980 புள்ளிகள் இறங்கி துவங்கியது.

ஏன்?

பொதுவாக காமாடிட்டியின் விலை ஏற்ற இறக்கம் என்பது தேவை மற்றும் அளிப்புக்கு ஏற்ப மாறும். இதை டிமாண்ட் அண்ட் சப்ளை என்று சொல்லுவோம். கமாடிட்டி என்று சொல்லும்போது அது உலகசந்தையின் விலையை பொருத்தும் மாறும். காட்டன் அதற்கு உதாரணம். அமெரிக்காவின் ஹார்வே புயல் டெக்ஸாஸ் மாகணத்தில் பயிரிடப்பட்ட காட்டன் பயிரை பலத்து சேதத்திற்கு உள்ளாக்கி இருக்கும் என்ற கணிப்பில், உலகச் சந்தையில் காட்டன் விலை ஏற ஆரம்பித்தது.

ஆனால், சென்ற வாரம், அமெரிக்காவின் விவசாயத்துறை, இந்த சீசனில் அமெரிக்காவின் காட்டன் விளைச்சல், சுமார் 6% கூடுதலாக இருக்கும் என்று அறிவித்தது. இதனால், .சி.. எனும் நியூயார்க் காட்டன் சந்தையில் விலை வீழ்ச்சி அடைந்தது. அது நம் சந்தையிலும் பிரதிபலித்துள்ளது.

இனி என்ன செய்யலாம்?

தற்போது 18180 என்ற கேப்டவுன் புள்ளி முக்கிய ஆதரவாக செயல்படுகிறது. இங்கிருந்து படிப்படியாக ஏற ஆரம்பித்துள்ளது. இப்போது 18470 என்பது உடனடி தடைநிலையாக உள்ளது. இந்த எல்லையை தாண்டினால் நல்ல ஏற்றம் வந்து இந்த இடைவெளியை மூடலாம்.

பிவட் டேபில்:

கமாடிட்டி

கான்ட்ராக்ட்

சப்போட் 2

சப்போட் 1

பிவட்

ரெசிஸ்ட்னஸ் 1

ரெசிஸ்டன்ஸ் 2

மென்தாயில்

நவம்பர்

1112

1287

1394

1469

1678

காட்டன்

நவம்பர்

18011

18124

18216

18353

18508

 

 

 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close