Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு..!


மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோ கணக்குகள் வாழ்நாள் உச்சத்தை எட்டியிருக்கின்றன. இந்த வருடத்தில் மட்டும் 76 லட்சம் புதிய ஃபோலியோ கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
 தற்போது மொத்தம் 4.66 கோடி ஃபோலியோ கணக்குகள் உள்ளன. இதற்கு முன் அதிகபட்சமாக 2009ல் 4.11 கோடி ஃபோலியோ கணக்குகள் இருந்தன. 

மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து முதலீடுகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. வங்கிக் கணக்குகளின் வட்டி விகிதங்கள் குறைந்த பிறகு பலரும் மியூச்சுவல் ஃபண்டில் தங்கள் பணத்தை முதலீடு செய்ய முன்வருகின்றனர். 
 

 

இதனால், மியூச்சுவல் ஃபண்டின் நிர்வகிப்பு சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. அக்டோபரில் மட்டும் ரூ. 51,148 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ. 21.41 லட்சம் கோடி மியூச்சுவல் ஃபண்டில் நிர்வகிக்கப்படுகிறது. இதில் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடு ஏப்ரல்-அக்டோபர் இடைப்பட்ட காலத்தில் மூன்று மடங்காக உயர்ந்திருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close