Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை, நிர்வகிக்கும் 8.68 லட்சம் கோடி ரூபாய்...!

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை, நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு, கடந்த மே மாதத்தில் 8.68 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்கள் குறைந்து வருவதால் முதலீட்டாளர்கள் கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதுதான்.

 ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வது கடந்த எட்டு மாதத்தில் இல்லாதளவுக்கு,மே மாதத்தில் 2910 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. லாங்க் டேர்ம் டெப்ட் ஃபண்ட்ஸ், ஷார்ட் டேர்ம் டெப்ட் ஃபண்ட், ஃபிக்ஸட் மெட்சூரிட்டி ஃபண்ட் உள்ளிட்ட இன்கம் ஃபண்டுகளில் 25,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

 

கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் சிறு முதலீட்டாளர்கள் கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யவே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்வது கடந்த 25 மாதங்களில் இல்லாதளவுக்கு அதிகரித்து 2.06 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. நீண்ட கால மற்றும் நடுத்தர கால பாண்டுகள் மே மாதத்தில் மட்டும் 3 சதவிகித வருமானத்தை தந்துள்ளது.

English Summary

Indian Mutual Fund AUM Surges to. Rs. 8.68 Lakh Crore. The MF industrys month-end assets under management (AUM) rose. Rs. 42,900 crore,or  5 %, month-on-month in May, numbers released by the Association of Mutual Funds of India (AMFI) show.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close