Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இப்படியும் ஒரு கருத்து!

வரும் நிதியாண்டில் தங்கம் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சற்று குறையலாம் என்கிறார் ஐ.எஃப்.சி.ஐ நிறுவனத்தின் சீனியர் டீலர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன் விரிவாக சொல்கிறார்.
 
கடந்த ஆண்டு பலவீனமான பொருளாதாரம் காரணமாக நடப்பு கணக்கு  பற்றாக்குறையால் அமெரிக்க டாலர்க்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ68.85ஐ தொட்டது. அதேசமயம் இந்தியாவின் நடப்பு பற்றாக்குறையை 4.8 சதவிதமாக எதிர்கொண்டது.  
 
காரணம் மிகவும் அதிக தங்கம் இறக்குமதி மற்றும் அமெரிக்கா மத்திய வங்கின் பாண்ட் வாங்கியதை குறைப்பது சம்பந்தமான எதிர்பார்ப்பால் வெளிநாட்டு முதலீடு நிறுவனங்கங்கள் தம் கையிலிருக்கும் பங்குகளை விற்று  ரொக்கங்களை நாட்டில் இருந்து வெளியே எடுத்த காரணங்களால் இவ்வளவு பெரிய பற்றாக்குறையை இந்தியா சந்திக்க வேண்டியிருந்தது.
 
ஆனால் மத்திய அரசு நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளில் தங்கம் இறக்குமதி குறைப்பது சம்பந்தமான நடவடிக்கைகள் தகுந்த பலனை அளித்தது. மத்திய அரசு தங்கம் இறக்குமதிக்கான வரியை 2 சதவிதத்லிருந்து 10 சதவிதமாக உயர்த்தியது. மேலும் ரிசர்வ் வங்கி தங்கம் இறக்குமதியாளர்களை தாங்கள் இறக்குமதி செய்யும் தங்கத்தில் 20 சதவிதம் கட்டாயமாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தது.   
 
தங்கம் இறக்குமதி குறைப்பு மற்றும் சரியான நேரத்தில் வட்டி விகித அதிகரிப்பு போன்ற காரணத்தால் ரூபாய் மதிப்பு சரிவது தடுக்கப்பட்டு தொடருந்து உயர்ந்தது. தற்பொழுது ரூபாயின் மதிப்பு 62 யில் பெரும்பாலும் சுற்றி கொண்டிருக்கிறது. 2013வது வருடம் 2 ஆம் காலாண்டில் மேலே குறிப்பிடபட்ட அரசாங்க மற்றும் ரிசர்வ் வங்கிகளின் நடவடிக்கைள் நடப்பு கணக்கு பற்றாக்குறையை 1.2 சதவிதமாக குறைத்திருக்கிறது.
 
எனினும் 2013 ஆம் ஆண்டில் தங்கம் சர்வதேச சந்தையில் 28 சதவிகிதம் குறைந்தது. அதேசமயம் உள்ளூர் சந்தையில் 3.5 சதவிகிதம் மட்டுமே குறைந்தது. அதனால் இந்திய தங்கம் மற்றும் ரூபாயின் மதிப்பில் சிறிய அளவு வீழ்ச்சி ஏற்பட்டாலும் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. 
 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close