ஏழாவது ஊதியக்குழுவிற்கு அசோக் குமார் மதூர் சேர்மன்
கடந்த செப்டம்பர் 2013ம் ஆண்டு இந்திய பிரதமரால் ஏழாவது ஊதியக்குழுவிற்கு அனுமதி வழங்கப்பட்டது, இந்நிலையில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக் குமார் மதூரை சேர்மனாகவும், விவேக் ரேவை முழுநேர உறுப்பினராகவும், ரத்தின் ராயை பகுதிநேர உறுப்பினராகவும், மீனா அகர்வாலை செயலாளராகவும் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தக் குழுவின் அறிக்கை ஜனவரி 1, 2016 முதல் அமலுக்கு வரும் மேலும் இதன் மூலம் 50 இலட்சம் அரசு பணியாளர்களும், 30 இலட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.