Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

200 மில்லியன் வாடிக்கையாளர்களை மிஞ்சும் ஏர்டெல்!

டெலிகாம் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் ஏர்டெல் நிறுவனம் கடந்த ஐந்து வருடத்திற்குள் இந்தியாவில் 200 மில்லியன் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் டெலிகாம் துறையில் இரண்டாவது இடம் வகித்துவரும் ஏர்டெல் நிறுவனம், 1994ல் முதல் முறையாக அனுமதி வாங்கியது. பின்னர் 1995ம் ஆண்டில் தனது சேவையை துவங்கியது. வாடிக்கையாளர் மற்றும் வருமான அளவை பொறுத்தமட்டில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. 2009ம் ஆண்டில் 100மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டிருந்தாகவும், அதன் பின் தற்போது சுமார் 200 மில்லியன் வாடிக்கையாளர்களை தாண்டிவிட்டதாகவும் இந்நிறுவனம் கூறியுள்ளது. 
ஜனவரியுடன் முடிந்த காலத்தில் மொபைல் வர்த்தகத்தில் 28.1 சதவிகிதம் பங்குகளை வைத்திருப்பதாகவும் தெரிகிறது. இதையடுத்து வோடஃபோன் 162.1 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு அடுத்த இடத்தில் உள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close