செல்போன் பயன்படுத்துவோர் எண்னிக்கை அதிகரிப்பு!
கிராமப்புறங்களில் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 41.4 லட்சம் அதிகரித்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய மாதத்தை விட 1.5 சதவிகிதம் அதிகமாகும்.

மொத்தமாக கிராமப்புறங்களில் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 28.53 கோடியாக இருக்கிறது. இதில் வோடபோன் நிறுவனம் 13.1 லட்சம் கிராமப்புற வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. இந்த தகவலை இந்திய செல்லுலார்
ஆப்பரேட்டர் சங்கம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய செல்போன் சேவை வழங்கும் நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் 12.5 லட்சம் புதிய வாடிக்கையாளர் அதிகரித்திருக்கிறார்கள். இந்த நிறுவனம் 9.1 கோடி
வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த ஐடியா நிறுவனம் புதிதாக 7.1 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஏர்செல் 4 லட்சம் புதிய வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளன கிராமப்புறங்களில் செல்போன் பயன்படுத்துவது தமிழகத்தில்தான் அதிகம். தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 5.74 லட்சம் புதிய கிராமப்புற வாடிக்கையாளர்கள் செல்போன் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். கிராமப்புறங்களில் டெலி டென்சிட்டி 42.67 சதவிகிதமாக தற்போது இருப்பது
குறிப்பிடத்தக்கது.