Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றுமதி அதிகரித்து வருவதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும்!

இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகரித்து வருவதால் நடப்பு நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2 சதவிகிதமாக குறையும் என பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக்குழு தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். 
 
 
சென்ற நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து 4.8 சதவிகிதமாக உயர்ந்து காணப்பட்டது. இதையடுத்து நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஏப்ரல்&செப்டம்பர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 3.1 சதவிகிதமாக (2,690 கோடி டாலர்) குறைந்தது. இது சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் 4.5 சதவிகிதமாக (3,790 கோடி டாலர்) உயர்ந்து இருந்தது.
 
நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பிற்கு கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவது முக்கிய காரணமாகும். எனவே, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. மேலும் மேற்கத்திய நாடுகளின் முன்னேற்றத்தால் நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் ஏற்றுமதி 5.71 சதவிகிதம் அதிகரித்து 25,709 கோடி டாலராக உயர்ந்துள்ளது. 
 
மந்தநிலையிலிருந்து பொருளாதாரம் விடுபட்டு வளர்ச்சி பாதைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 4.9 சதவிகிதம் வளர்ச்சி ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது அரையாண்டில் பொருளாதாரத்தில் 5.2 சதவிகிதம் வளர்ச்சி ஏற்படும். இது, பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வருவதை எடுத்துக்காட்டுகிறது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close