Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பயணம் செய்ய முடியாமல் போனால் கட்டணம் திரும்ப கிடைக்காது?

 முன்பதிவு செய்து விட்டு ரயிலில் பயணம் செய்ய முடியாமல் போகும் பயணிகளுக்கு கட்டணம் திரும்பி தர மாட்டாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

 

வரும் மார்ச் 1ம் தேதியில் இருந்து இந்த முறை அமல்படுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. குழுவாக பயணம் செய்ய  டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு அதில் சிலர் வராமல் போனாலும் பணம் திரும்பி தர மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய ரயில்வேயின் மூத்த கோட்ட மேலாளர் சுமன் டெல்கர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த 21ம் தேதி அனைத்து ரயில்வே பொது மேலாளர்களுக்கும் இது குறித்து சுற்றறிக்கையை ரயில்வே வாரியம் அனுப்பியுள்ளதாக சுமன் தெரிவித்துள்ளார். எனினும் உயர் வகுப்பில் படுக்கை வசதியுடன் பயணிக்க முன்பதிவு செய்த பயணிக்கு நிர்வாக கோளறு காரணமாக கீழ் வகுப்பில் இருக்கை அளிக்கப்பட நேர்ந்தால் இந்த வேறுபாடு தொகை திரும்ப அளிக்கப்படும். அதே போல குளிர் சாதன வசதி கொண்ட பெட்டிகளில் ஏ.சி இயங்காமல் போனாலோ ரயில்கள் ரத்து செய்யப்பட்டாலோ பல்வேறு காரணங்களால் மாற்று பாதைகளில் ரயில் திருப்பி விடப்படும் போது இடையில் இறங்கும் பயணிகள் உள்ளிட்டோருக்கு விதிமுறைகளுக்கு ஏற்ப பணம் திரும்பி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close