உக்ரைன் நாட்டில் போர்: ஏற்றம் கண்டுள்ளது இந்திய பங்குச் சந்தை!
உக்ரைன் நாட்டில் போர் சூழல் நிலவுவதால் நேற்று (3.3.2014) முழுவதும் இறங்கு முகத்தில் இருந்த இந்திய பங்குச் சந்தை இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. உக்ரைனிலிருந்து போர் படையை திரும்ப வருமாறு ரஷ்ய அதிபர் உத்தரவிட்டிருப்பதாக வந்த செய்தியினை அடுத்து உலகெங்கிலும் பங்குச் சந்தைகள் இன்றும் ஏற்றம் கண்டுள்ளன.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் நேற்று 21000 புள்ளிகளுக்கு கீழே சென்றது. இன்று மதியம் 2.15 மணியளவில் 225 புள்ளிகள் உயர்ந்து 21173..41 என்ற நிலையிலும், தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 67 புள்ளிகள் அதிகரித்து 6228.70 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது. .