Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்.சி.எக்ஸ், ஃபைனான்ஷியல் டெக் பங்குகளின் விலை 5% வீழ்ச்சி!

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று (08-05-2014) 59.98 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்திய பங்கு சந்தைகள் தற்போது (1.30) சற்று சரிவில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 6 புள்ளிகள் குறைந்து 22,316 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 1 புள்ளி குறைந்து 6,650 ஆக உள்ளது. 
 
 
நேஷனல் ஸ்பாட் எக்சேஞ்ச் நிறுவன பிரச்னையில், அதன் புரமோட்டர் நிறுவனமான ஃபைனான்ஸியல் டெக்னாலஜிஸ் நிறுவனர் ஜிக்னேஷ் ஷா மீது ஏற்கனவே புகார் கூறப்பட்ட நிலையில், மும்பை போலீசார் அவரை நேற்று கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து ஃபைனான்ஷியல் டெக்னாலஜிஸ் நிறுவன பங்கின் விலை 4 சதவிகிதம் குறைந்தும், எம்.சி.எக்ஸ் நிறுவன பங்கின் விலை 5 சதவிகிதம் குறைந்தும் காணப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close