Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனைத்து ஏடிஎம்களும் ஜூலை முதல் பேசவேண்டும்: ஆர்பிஐ

ஆர்பிஐ வங்கிகளை வரும் ஜூலை 1ம் தேதி முதல் புதிதாக தொடங்கப்பட்ட ஏடிஎம்களில் பேசும் வசதியும், பார்வையற்றவர்கள் பயன்படுத்த உதவியாக பிரெயில் விசைப்பலகை கொண்டும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

 


 


இதற்கான அறிவிப்பை கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதமே ஆர்பிஐ வங்கிகளுக்கு அறிவித்திருந்தது, வங்கிகளும் தங்களுக்கு ஏடிஎம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்த வசதிகளை கொண்டு புதிய ஏடிஎம்களை தயாரிக்க சொல்லியிருந்தது. அதன்படி புதிய ஏடிஎம்களில் ஜூலை 1 முதல் பேசும் மற்றும் பிரெயில் எழுத்துக்களுடன் புதிய ஏடிஎம்கள் செயல்படுத்த வேண்டும் என்றும், பின்னர் பழைய ஏடிஎம்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்த வேண்டும் என்றும் வங்கிகளுக்கு ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close