Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அக்ரி கமாடிட்டி... பரிமாற்றக் கட்டணம் உயர்வு!

கமாடிட்டி எக்சேஞ்சுகளில் ஒன்றான என்.சி.டி.எக்ஸ். அக்ரி கமாடிட்டிகளுக்கான பரிமாற்ற கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. இது நடப்பு மாதத்தில் நடைமுறைக்கு வரும் என்றும் அந்த அமைப்பானது தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் இதற்கான கட்டணத்தை இந்த அமைப்பு குறைத்தது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். முன்பு 200 கோடி ரூபாய் வர்த்தக அளவுக்கு ஒரு லட்சம் ரூபாய் பண பரிமாற்றத்திற்கு 1.95 ரூபாயாக கட்டணம் இருந்தது. தினசரி வர்த்தக அதிகரிப்பு பிரிவின் கீழ் 200 கோடி ரூபாய் வர்த்தக அளவுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான பண பரிமாற்றத்திற்கு 1.30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் இனி அப்படியில்லாமல் 100 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக அளவுக்கு ஒரு லட்சம் பதிப்பிலான பண பறிமாற்றத்திற்கு மூன்று ரூபாய் கட்டணமும், 100 கோடிக்கு மேல் நடக்கும் பறிமாற்ற தொகையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு இரண்டு ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும் என்று என்.சி.டி.எக்ஸ். அமைப்பு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close