Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுப்பிக்கதக்க மாற்று எரிசக்தி கண்காட்சி !!

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை ஏற்பாடு செய்திருந்த சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாடு மற்றும் மாற்று எரிசக்தி 2014 கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்அண்மையில் நடைபெற்றது.
 

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் "மாற்று எரிசக்தி 2014" என்கிற தலைப்பில் காற்றாலை, சோலார், மற்றும் பயோமாஸ் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பெறுவது மற்றும் அந்தந்த துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.. குறிப்பாக மாற்று எரிசக்தி மூலம் எரிசக்தி தன்னிறைவு பெறுவது குறித்தும், இந்தியா முழுவதும் முன்னெடுத்து வரும் முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.    

கருத்தரங்கத்தின் இணை நிகழ்வாக முன்னணி எரிசக்தி நிறுவனங்கள் வழங்கிய பயிற்சி வகுப்புகளும் நடைபெற்றது. இதில் மாற்று எரிசக்தி துறையில் ஈடுபடும் தொழில் முனைவர்கள், மாணவர்கள், தொழில் வல்லுனர்கள் கலந்து கொண்டு புதுப்பிக்கதக்க எரிசக்தி குறித்த பயிற்சி மற்றும் ஆலோசனைகளை  வழங்கினர்.

இதை ஒட்டி நடந்த கண்காட்சியில் தொழிற்சாலைகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற வணிக நிஊவனங்கள், விவசாய மற்றும் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய எரிசக்தி ஆதாரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் விற்பனையாளர்கள் இந்த எரிசக்தி ஆதாரங்கள் மூலம் எரிசக்தி பெறுவது எப்படி என்பதையும் பார்வையாளர்களுக்கு விளக்கினர்.

தமிழ்நாடு மின்சாரம் மர்றும் நலவாழ்வு துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை துவக்கி வைத்தார். மேலும் ஸ்ரீ தருண் கபூர் ஐஏஎஸ், இணை செயலாளர் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், ராஜேஸ் லோகானி ஐஏஸ், செயலாளர், தமிழ்நாடு எரிசக்தி துறை,   தமிழ்நாடு எரிசக்தி முகமை செயலாளர் அனில் ஜெயின் ஐஏஎஸ்,
சுதீப் ஜெயின், ஐஏஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

-  நீரை.மகேந்திரன்.
படங்கள்: வீ.நாகமணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close