Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை தர சுவிஸ் அரசு முடிவு!

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை இந்தியாவுக்கு தர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியாவைச் சேர்ந்த பலர் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கருப்பு பணத்தை மீட்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் பணம் 40 சதவீதம் அதிகரித்து இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில், அந்நாட்டிலுள்ள வங்கிகளில் கருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை தருமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதையடுத்து, சுவிட்சர்லாந்து அரசு அங்குள்ள வங்கியில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை தயாரித்துள்ளது. அந்த பட்டியலை இந்தியாவுக்கு தர சுவிட்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close