Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.16.50 அதிகரிப்பு

எண்ணெய் விற்பனை நிறுவனங்கள், மானியம் அல்லாத வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ. 16.50 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு ஜூன் 30 மற்றும் ஜூலை 1 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதற்குமேலும் விற்பனை செய்யப்படும் சிலிண்டர் விலை அதாவது மானியம் அல்லாத சிலிண்டர் விலை மேலும் ரூ.16.50 ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் உள்ள விலையை கருத்தில் கொண்டு இந்த விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோர் 99 சதவிகிதத்திற்கும் கூடுதலாகும். இவர்களுக்கு எந்த விதத்திலும் இந்த விலை உயர்வால் பாதிப்பு இல்லை. இந்த விலை அதிகரிப்பு ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான நுகர்வோரை மட்டுமே பாதிக்கும் என்று பெட்ரோலிய அமைச்சக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close