Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரயில் கட்டண உயர்வால் அமளி: மக்களவை நாள் முழுவதும் முடங்கியது!

ரயில் கட்டணம் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
 

மக்களவை இன்று காலை தொடங்கியதும் இறந்த உறுப்பினர்கள் மற்றும் சென்னையில் கட்டட விபத்தில் பலியான 61 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ரயில் கட்டணம் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். ஆனாலும், எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே அலுவல் நடந்தது.

ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். அப்போது, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து அவை நடவடிக்கையை நண்பகல் 12 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

நரேந்திர மோடி அரசின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது.

மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு

இதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு அவை கூடியது. அப்போது, விளையாட்டு போட்டிகளில் சாதித்த சாய்னா, பங்கஜ் அத்வானிக்கும் மற்றும் 5 செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவை நடவடிக்கை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் 2 மணிக்கு அவை மீண்டும் தொடங்கியது. அப்போதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close