Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2022-ல் அனைவருக்கும் வீடு!

   
 2022-ல் அனைவருக்கும் சொந்த வீடு கிடைக்க அரசு உறுதிசெய்துள்ளது.

வீட்டு கடனிற்கு கூடுதல் வரி சலுகை அளிப்பதன் மூலம் அரசு இதனை செயல்படுத்தும். இது மக்களை, முக்கியமாக இளைஞர்களை சொந்த வீடு வாங்க ஊக்குவிக்கும்.

தேசிய வீட்டு வசதி வங்கியில் குறைந்த விலையில் கட்டக்கூடிய மலிவு வீடுகள் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் நகரத்தில் உள்ள ஏழை மக்கள் அனைவரும் வீடு கட்டும் வசதிவாய்ப்பு ஏற்படுத்தப்படும். இதற்காக 2014-15 மத்திய பட்ஜெட்டில் ரூ.4,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.


இதனை மேலும் வலுபடுத்த இந்த துறையில் அந்நிய முதலீட்டை எளிமையாக்கும் வழிகளை அரசு மேற்கொண்டுள்ளது. வேறு ஏதும் வழிகள் இருப்பின், அதனை ஆய்வு செய்யவும் அரசு தயாராக உள்ளது. மேலும், குடிசை பகுதி மேம்பாட்டினை நிறுவன சமூக பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அருண்ஜெட்லி கூறினார்.

இந்த நடவடிக்கை தனியார் நிறுவனங்களின் பங்கை அதிகரிக்கும் நோக்கத்தோடு செய்யப்பட்டுள்ளது. கிராம வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கிராம வீட்டுவசதி கடன் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெரும்பாலான கிராம மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

இதனை அடுத்து, நாட்டின் கிராமபுற வீட்டு வசதிக்கு ஆதரவாக 2014-15ம் ஆண்டிற்கு தேசிய வீட்டு வசதி வங்கிக்கு ரூ.8,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close