Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை வசதி , 24 மணி நேர மின்சாரம்!

அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை வசதி!

அண்ணல் காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு 2019 ஆம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறுயுள்ளார். நாடாளுமன்றத்தில் தனது முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.                      

கிராமப்புறங்களுக்கு நவீன கட்டமைப்பு!

கிராமப்புறங்களில் நகர்ப்புறங்களைப் போன்ற ஒருங்கிணைந்த கட்டமைப்புகளை மேம்படுத்த "ஷியாமா பிரசாத் முகர்ஜி ரூபன் மிஷன்" என்றத் திட்டம் விரைவில் துவக்கப்படும். இதன் மூலம் கிராமங்களில் பொருளாதாரமும், திறனும் மேம்பாடு அடையும். தனியார், பொதுதுறை பங்களிப்புடன் பல்வேறு நிதி உதவிகள் மூலம் இத்திட்டம் மேற்கொள்ளப்படும். இத்தகவலை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தனது முதல் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் வசிப்போர் நகர்ப்புற வசதிகளை பெரும் திட்டம் குஜராத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை உதாரணமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


24 மணி நேர மின்சாரம்

அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கும் கிராமப்புறப் பகுதிகளில் மின் பகிர்மானத்தை அதிகரிப்பதற்கும் "தீனதயாள் உபாத்யாயா கிராம மின் திட்டம் " துவக்கப்படும். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது முதல் நிதிநிலை அறிக்கையில் நாடாளுமன்றத்தில் பேசினார்.

வல்லபாய் படேல் சிலை நிறுவ ரூ.200 கோடி
 
நாட்டின் ஒற்றுமையின் சின்னமாக விளங்கியவர் சர்தார் வல்லபாய் படேல். அவருக்கு குஜராத் அரசு மாபெரும் சிலையை நிறுவி வருகிறது. மாநில அரசின் இந்த முயற்சிக்கு ஆதரவு தரும் வகையில் மத்திய அரசின் சார்பில் ரூ.200 கோடி வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் சமர்ப்பித்த தனது முதலாவது நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தார்.

மின்னணு பொருட்களுக்கு சுங்க வரி குறைப்பு
தொலைக்காட்சி பெட்டிகளில் பயன்படுத்தப்படும் பிக்சர் டியூப்புகளுக்கும், 19 இஞ்சிகளுக்கு குறைவான எல்சிடி, எல்இடி டிவி பேனல்களுக்கும் அடிப்படை சுங்க வரி குறைக்கப்படும். இந்தத் தகவலை மத்திய நிதியமைச்சர் திரு. அருண்ஜேட்லி மக்களவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசுகையில் தெரிவித்தார். சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்கள் வாங்குவதற்கும் ஐந்து சதவீத சுங்க வரி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆன்லைன் விளம்பரங்களுக்கு சேவை வரி

ஆன்லைன், மொபைல் மீடியா ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் விளம்பரங்களுக்கு சேவைவரி செலுத்தும் என்று மத்திய நிதியமைச்சர் திரு. அருண்ஜேட்லி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அருண்ஜேட்லி, அச்சு ஊடகங்களில் செய்யப்படும் விளம்பரங்களுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளித்திருப்பது தொடரும் என்றார்.



முழுநேர சுங்க வரி பரிசோதனை வசதி
 

 
ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கு சுங்க வரி பரிசோதனை வசதி மேலும் 13 விமான நிலையங்களுக்கு விரிவாக்கப்படும். குறிப்பிட்ட சில ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களுக்கு இந்த வசதி 14 துறைமுகங்களில் ஏற்படுத்தித் தரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, மக்களவையில் தாக்கல் செய்த தனது முதல் நிதிநிலை அறிக்கையின் மீது உரையாற்றியபோது குறிப்பிட்டார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close