Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லிக்கு ''அம்மா எக்ஸ்பிரஸ்'' அதிமுக எம்.பி கோரிக்கை

ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக எம்.பி கே.என்.ராமச்சந்திரன் மத்திய அரசுக்கு சென்னையிலிருந்து டெல்லிக்கு 'அம்மா எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் புதிய ரயில் இயக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மும்பையை தொடர்ந்து சென்னைக்கும் புல்லட் ரயில்களை இயக்க வேண்டும். தமிழக முதல்வரின் கோரிக்கைபடி  சென்னை எம்.ஆர்.டி.எஸ். பறக்கும் ரயில் போக்குவரத்தை, மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
 
திரிசூலம் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும். மேலும் ராமானுஜர் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தாம்பரத்துக்கு புதிய வழித்தடம் அமைக்கவேண்டும். இந்த பாதையையை பெங்களூரு வழத்தடத்தோடு இணைக்க வேண்டும் என்றார்.
 
அதுமட்டுமின்றி சென்னையிலிருந்து டெல்லிக்கு அம்மா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய ரயில் ஒன்றை அறிமுகப்படுத்தி இயக்க வேண்டும் என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close