Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எல்லா துறைகளிலும் இந்தியா, தென் அமெரிக்கா இடையே வலுவான ஒத்துழைப்பு - நரேந்திர மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது.
தென் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுடன் நான் உரையாட வாய்ப்பு அளித்த பிரேசிலுக்கு எனது நன்றி. இன்று எம்மைச் சந்திக்க உங்களின் பொன்னான நேரத்தை செலவிட்ட எல்லா சிறப்பு விருந்தினர்களுக்கும் எனது நன்றி. தென் அமெரிக்காவில் அதிகமான திறன் உள்ளது. தென் அமெரிக்கா நிறைய வளங்கள் மற்றும் திறமைகளால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய தூணாக இது விளங்குகிறது. பொருளாதார வளர்ச்சியில் தெளிவில்லாத நிலையில், பிரிக்ஸ் நாட்டின் வளர்ச்சி உலகத்திற்கு மிகவும் முக்கியமானது. இணைக்கப்பட்ட இந்த உலகில் நமது இலக்கும் இணைக்கப்பட்டுள்ளது. நாம், நமது கனவுகளாலும், சவால்களாலும் இணைக்கப்பட்டுள்ளோம். ஒவ்வொருவருடைய வெற்றியிலும் அனைவருக்கும் பங்கு உண்டு. வாய்ப்புகளுக்கு தூரம் ஒரு தடையில்லை. உலகின் பிற பகுதிகளில் உள்ள சவால்களிலிருந்து இது நம்மை பிரிப்பதில்லை.
விரைவான வளர்ச்சிக்கும், புதிய வாய்ப்புகளை உருவாக்கவும்
வறுமை என்ற சவாலுக்கு தீர்வு காணவும்
நமது சுற்றுசூழலை பாதுகாக்கவும், வளங்களை சிறந்த முறையில் உபயோகிக்கவும் நாம் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும்.

இன்று நம்முடைய விவாதங்கள் பிரிக்ஸ் மற்றும் தென் அமெரிக்காவிற்கு இடையேயான கூட்டுறவுக்கான புதிய யோசனைகளை கொண்டுவர வேண்டும். இதற்காக பிரிக்ஸ் நாடுகள் ஏற்கனவே பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கியின் மூலம் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது. இந்த மாநாடு ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.

மதிப்பிற்குரிய சிறப்பு விருந்தினர்களே, இந்தியாவும் தென் அமெரிக்காவும் ஆழமான நட்பைக் கொண்டுள்ளது.
ஆக்டேவியோ பாஸ், கப்ரியேல் கார்ஷியா மார்கஸ், பப்லோ நேருடா போன்ற எழுத்தாளர்களும் கவிஞர்களும் இந்தியாவில் பிரபலமானவர்கள். அதே போல எங்களின் தேசிய கவிஞர் ரவீந்தரநாத் தாகூரை இங்கு அனைவருக்கும் பிடிக்கும். தென் அமெரிக்கா, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்த இந்தியர்களுக்கு வீடாக விளங்குகிறது. இந்த இரு தேசங்களுக்கிடையே பல தலைமுறைகளாக வலுவான நட்பு தொடர்ந்து வருகிறது.

தென் அமெரிக்காவுக்கும் எனது சொந்த மாநிலமான குஜராத்துக்கும் இடையே அதிக தொடர்புள்ளது:
பன்னெடுங்காலத்திற்கு முன்பு குஜராத்திலிருந்து கிர் பசு பிரேசில் சென்றது. இந்த அற்புதமான கண்டத்திற்கு, இந்தியாவின் பாதி வர்த்தகம் குஜராத்தின் மூலமாகவே வருகிறது.

சிறப்பு விருந்தினர்களே, குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நான் இருந்த போது உங்களுடைய தூதர்களை தில்லியில் சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நான் அவர்களின் அன்பில் வியந்தேன். இந்தியாவுக்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கான அவர்களின் ஆர்வமும் எனக்கு வியப்பூட்டியது.
எப்பொழுதும் இல்லாத அளவில் தென் அமெரிக்காவுடன் இந்தியா மிக நெருக்கமாக செயல்படும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

ஜி-77 பிரிக்ஸின் உறுப்பினராகவும், சர்வதேச தளங்களிலும் இணைந்து செயல்படுவோம்.
மரியாதைக்குரிய சிறப்பு விருந்தினர்களே, கடந்த சில ஆண்டுகளாக தென் அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தகம் வளர்ந்துள்ளது. தென் அமெரிக்காவில் இந்திய முதலீட்டாளர்கள் வளர்ந்து வருகின்றனர். ஆனாலும் இது இருக்கும் திறனைவிட குறைவாகவே உள்ளது. ஹைட்ரோ கார்பன் முதல் மருத்துவ துறை வரை, ஜவுளி முதல் தோல் பொருட்கள் வரை, பொறியியல் பொருட்கள் முதல் மோட்டார் வாகனங்கள் வரை எல்லா துறைகளிலும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்தியா மற்றும் மெர்கார்சர் வர்த்தக பிரிவு, சில்லிக்கு இடையேயான விருப்ப வர்த்தக ஒப்பந்தத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் தென் அமெரிக்கா மற்றும் கெரிபியன் வர்த்தக மாநாடிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதே போல, அக்டோபர் 2014ல் இந்தியாவில் முதலீட்டிற்கான மாநாடு நடக்க உள்ளது. மதிப்பிற்குரியவர்களே, இந்த வாய்ப்பின் முழு பலனையும் பெற, உங்கள் வர்த்தக தலைவர்களை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

ஒருங்கிணைப்பிற்கான வாய்ப்புகள் வெறும் தூரத்தினால் குறுகி விடுவதில்லை. நமது கற்பனைகளாலும் முயற்சிகளாலுமே குறைந்துவிடுகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேம்பாட்டிற்கான வளர்ச்சியின் பயணத்தில், ஒருவருக்கு ஒருவர் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அனுபவம், சிறந்த செயல்பாடுகள், புதிய தீர்வுகள் ஆகியவற்றை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு இந்தியா உறுதியளிக்கிறது. தென் அமெரிக்காவின் வேளாண்மை, தோட்டக்கலை, பேரிடர் மேலாண்மை, தொடர்பியல், நீதி ஆகிய துறைகளில் இந்தியா வல்லுநர்களை நியமித்துள்ளது.  புதுபிக்கத்தக்க எரிசக்தி துறையிலும் நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும், தென் அமெரிக்காவிலிருந்து கிட்டதட்ட 250 மாணவர்கள் சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இது மட்டும் போதாது என்று நான் நம்புகிறேன். இந்த எண்ணிக்கையை நாம் உயர்த்த வேண்டும்.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்தின் சிறப்பறிவு தன்மையை பகிர்ந்து கொள்ள, நாங்கள் தென் அமெரிக்க நாடுகளில் தகவல் தொழில்நுட்பத்திற்கான சிறப்பு மையங்களை அமைப்போம்.

தொலைதொடர்பு மருத்துவம், தொலைதொடர்பு கல்வி மற்றும் மின் ஆளுமை ஆகிய துறைகளில் இந்தியா தனது ஒத்துழைப்பை விரிவாக்க தயாராக உள்ளது. வானிலை முன்னறிவிப்பு, வளங்கள் கண்டறிதல் மற்றம் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றை எங்களது விண்வெளி திறன்கள் மூலம் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். எல்லா துறைகளிலும் இந்தியா மற்றும் தென் அமெரிக்காவிற்கும் இடையேயான வலுவான ஒத்துழைப்பு அதிகமாகும் என நான் எதிர் பார்க்கிறேன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close