வளர்ச்சி விகிதம் குறைவு!
ஆசியாவிலேயே ஸ்மார்ட்போன் வர்த்தகம் அதிகமாக நடைபெறும் நாடுகளில் மிக முக்கிய இடத்தில் இருக்கும் நாடு இந்தியா. கடந்த ஏப்ரல், ஜூன் காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் விற்பனை சதவிகிதம் 84% அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 10.02 மில்லியனாக இருந்த இந்தியாவின் ஸ்மார்ட்போன் விற்பனை 18.42 மில்லியனாக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் கடந்த ஜனவரி, மார்ச் காலாண்டின் ஸ்மார்ட்போன் விற்பனை 17.59 மில்லியன். இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 189% அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. கடந்த ஏப்ரல்-ஜூன் மாத காலண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் நிறுவனங்கள் முறையே சாம்சங் (1.07 கோடி யூனிட்கள்), மைக்ரோமேக்ஸ் (86.67 லட்சம்), நோக்கியா (64.59 லட்சம்), கார்பன் (56.51 லட்சம்), லாவா (52.04 லட்சம்).
