Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி எல்ஐசியிலும் எலக்ட்ரானிக் வடிவத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசிகள்!

ஐஆர்டிஏ முன்னோடி திட்டமாக இரண்டு மாதத்திற்கு அனைத்து லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தங்களின் மொத்த பாலிசியில் 5 சதவிகிதம் அல்லது ஆயிரம்  பாலிசிகளை எலக்ட்ரானிக் வடிவத்தில் மாற்ற வேண்டும் என அறிவித்திருந்தது. அதாவது, பங்குகளை போலவே இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கும் தனியாக ஒரு டீமேட் கணக்கு துவங்குவது. 
 
இதற்கான வேலைகளை பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் ஆரம்பித்து இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வரவு வைக்க ஆரம்பித்து விட்டன. மிகப் பெரிய பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான  எல்ஐசி இப்போதுதான் இதற்கான வேலையை ஆரம்பித்துள்ளது.  
இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எலகட்ரானிக் வடிவத்தில் கொண்டு வருவதற்காக 5 ரெப்பாசிட்டரிகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது எல்ஐசி நிறுவனம். அதாவது, ஐஆர்டிவின் அனுமதி பெற்ற கார்வி, என்எஸ்டிஎல் டேட்டாபேஸ், சென்ரல் இன்ஷூரன்ஸ் ரெப்பாசிட்டரி, எஸ்ஹெச்சிஐஎல் இன்ஷூரன்ஸ் ரெப்பாசிட்டரி ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close