Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அந்நிய முதலீடுகள் அதிகரித்த 2014

அந்நிய முதலீடுகள் அதிகரித்த 2014
 
இந்த வருடத்தில் இதுவரை 30 பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு வந்துள்ளது. 
ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அந்நிய முதலீடுகளை அதிகரிப்பதற்கு மத்திய அரசு கவனம் செலுத்தியது. இந்த வருடத்தில் இதுவரை 30 மில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 200 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகள் வந்துள்ளன.
 
 
 
ஜவுளிதுறை புதிய கொள்கைகள் 
 
மத்திய அரசு விரைவில் ஜவுளிதுறை தொடர்பான புதிய கொள்கைகளை கொண்டு வர உள்ளது. இது தொடர்பாக  பேசிய மத்திய ஜவுளிதுறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்காவார்,  விரைவில் அனைத்து மாநிலத்திலும் உள்ள ஜவுளி துறை அமைச்சர்களின் கூட்டம் நடத்தி முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
செபியின் ஒரு வருட இலக்கு
 
செபி ஒரு வருடம் இலக்கு வைத்து பொருளாதார மோசடி செய்யும் நிறுவனங்களை கண்காணிக்க உள்ளது. இதற்காக நிறுவனங்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து பொருளாதார குற்றங்கள் நிகழாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. 
 
பொருளாதார மோசடி: ஆர்பிஐ, செபி அதிரடி
 
செபி மற்றும் ஆர்பிஐ சேர்ந்து பொருளாதார மோசடிகள் மேற்கொள்வோர் மீது கடுமையான முடிவுகள் எடுக்க உள்ளது. வங்கிக் கடன்களை திருப்பி செலுத்தாத கடனாளர்கள் மீது ஆர்பிஐ நடவடிக்கையும்,  முதலீடுகள் மற்றும் பங்குகள் வழி நிதி திரட்டும் நிறுவனங்கள் மீது செபியும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர உள்ளது. 
 
 
அதிகரித்த ரியல் எஸ்டேட் முதலீடு
 
ரியல் எஸ்டேட் துறையில் தனிப்பட்ட பங்கு முதலீடு ரூ 12 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. 2014 ஆண்டு முதல் ஆறு மாத காலத்தில் ரூ.4,100  கோடியாக இருந்த இந்த முதலீடுகள் 2014 இறுதி கட்டத்தில் ரூ. 12 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கின்றது, சொத்து ஆலோசனை நிறுவனமான குஷ்மேன் அண்டு வாக்ஃபீல்டு நிறுவனம்.
 
பங்குச் சந்தை மதிப்பு டாப் 5 நிறுவனங்கள் 
 
டாப் 5 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 31,164.67 கோடியை எட்டியுள்ளது. 
டிசிஎஸ், ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி இந்த ஐந்து நிறுவனங்களும் டாப் 5 சந்தை மதிப்பை கொண்டுள்ளன. சிஐஎல், இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ, சன்பார்மா  நிறுவனங்களின் சந்தை மதிப்பு குறைந்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close