Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உயர்ந்தது இந்தியாவின் தரக்குறியீடு! ஷேர்லக்!

மாலை வணக்கம் சொன்னபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக்.  கேள்விகளை கேட்க நாம் தயாராக,  ஷேர்லக் பதில் சொல்ல தயாரானார்.  

ஐஐபி டேட்டா குறைந்திருக்கிறதே, என்ன காரணம்?

''ஆமாம். ஜூலை மாதத்துக்கான ஐஐபி டேட்டா 0.5% குறைந்திருக்கிறது. தொழில் துறை இன்னும் அதிக அக்கறையோடு முன்னேற வேண்டியதையே இது காட்டு கிறது. ஆகஸ்டு மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்க குறியீடு 7.96 சதவிகிதத்திலிருந்து 7.80 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. இனிவரும் நாட்களில் பணவீக்கம் இன்னும் குறைந்தால்தான் கடன்களுக்கான வட்டி விகிதங்களை ஆர்பிஐ மாற்றும்.''

பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் பற்றி பலமாக பேச்சு அடிபடுகிறது. அந்தச் சமயத்தில் பங்குகளை வாங்கலாமா?

''ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, என்ஹெச்பிசி நிறுவனப் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.45,000 கோடி திரட்டப்பட இருக்கிறது. பொதுத்துறை பங்குகள் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்யக்கூடாது. முதலீடு செய்ய இருக்கும் நிறுவனங்களின் நிகர லாப வளர்ச்சி எப்படி இருக்கிறது, வணிகம் மற்றும் உற்பத்தி செயல்பாடு எப்படி இருக்கிறது, எதிர்காலம் எப்படி இருக்கும் என ஆராய்ந்த பிறகே முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும் என அனலிஸ்ட்கள் சுட்டிக்காட்டுகி றார்கள்.''

இந்தியாவின் எதிர்காலம் பற்றி பேங்க் ஆஃப் அமெரிக்கா  மெரில் லிஞ்ச் பாசிடிவ்வாக சொல்லி இருக்கிறதே?

''ஆம். 'வொர்ஸ்ட் இஸ் ஓவர்' (மோசமான காலம் கடந்துவிட்டது) என்று சொல்லியிருக்கிறது. இதைப் பின்பற்றி இதர தரக்குறியீடு நிறுவனங் களான எஸ் அண்ட் பி போன்றவையும் இந்தியாவுக்கான தரக்குறியீட்டை உயர்த்தலாம். ஒரு மாதத்துக்குமுன் தரக்குறியீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை மத்திய அரசு அதிகாரிகள் சந்தித்து பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.''

வங்கிப் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ரூ.55,000 கோடியைத் தாண்டி இருக்கிறதே?

''பொருளாதாரம் சீராகும்போது முதலில் வளர்ச்சி காண்பது நிதிச் சேவை. குறிப்பாக, வங்கி துறையாக இருக்கிறது. அந்தவகையில் கடந்த ஏழு மாதங்களாக வங்கிப் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்டுகள் அவற்றின் முதலீட்டை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. ஆகஸ்ட் மாத முடிவில் வங்கிப் பங்குகளில் செய்யப்பட்ட மொத்த முதலீடு ரூ.56,625 கோடியாக அதிகரித்துள்ளது. இது, இதுவரை இல்லாத அதிக தொகையாக உள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகித்து வரும் ரூ.2.81 லட்சம் கோடியில் இது 20.10%. 2009 ஆகஸ்ட்டில் 12.73 சதவிகிதமாக இருந்தது. பங்குகளைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ பங்குகளில் அதிக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அடுத்த இடங்களில் சாஃப்ட்வேர் (ரூ.29,668 கோடி), பார்மா (ரூ.19,394 கோடி), வாகனம் (ரூ.29,668 கோடி) போன்ற துறைகள் உள்ளன.''

டிவிஎஸ் மோட்டார் நிர்வாகத்தில் மாற்றம் நடந்திருக்கிறது போலிருக்கிறதே?

''உண்மைதான். டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சேர்மன் வேணு சீனிவாசனின் ஒரே மகன் சுதர்ஷன். இவர் ஜாயின்ட் மேனேஜிங் டைரக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சுதர்ஷனின் சகோதரியும் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகன் ரோஹனின் மனைவியுமான லட்சுமி அடிஷனல் நான்-எக்ஸிக்யூட்டிவ் டைரக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நிறுவனத்தின் நிர்வாகத்தில் இளம் தலைமுறை வருகையால், டிவிஎஸ் மோட்டார் விற்பனையில் இன்னும் வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.''

இன்ஃப்ரா திட்டங்களில் அரசு நிறைய செலவழிக்கப் போகிறதாமே?

''மத்திய அரசு, உள்கட்டமைப்பு திட்டங்களை வேகமாகச் செயல்படுத்த ஆரம்பித்திருக்கிறது. பல்வேறு விதிமுறை கள் சார்ந்த பிரச்னைகளைத் தாண்டி, 1.5 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் துறை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான இன்ஃப்ரா திட்டங் களை மேற்கொள்ளப்போவதாக நிதின் கட்காரி சொல்லியிருக்கிறார். இனி இன்ஃப்ரா பங்குகளைக் கவனிக்கலாம்.''

ஆகஸ்ட் மாதத்தில் வாகன விற்பனை வேகம் எடுத்திருக்கிறதே?

கார், டூவீலர், ஆட்டோ என பரவலாக விற்பனை அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில், உதிரிபாகங்கள் விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவையில் வணிக விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டிருப்பதற்காக காம்பெட்டிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா அமைப்பு மாருதி சுஸூகி இந்தியா, டாடா மோட்டார்ஸ், எம் அண்ட் எம், ஹோண்டா கார் உள்ளிட்ட 14 கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ. 2,546 கோடி அபராதம் விதித்துள்ளது. மேல்முறையீட்டிலும் இதே அபராதம் கட்டப்படவேண்டும் என தீர்ப்பு வந்தால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும். இதை மனதில் வைத்து பங்கு முதலீட்டை மேற்கொள்வது நல்லது.

கச்சா எண்ணெய் விலை இறங்கி வருகிறதே?

''தொடர்ந்து ஆறு வர்த்தக தினங் களில் ஃப்ரன்ட் வகை கச்சா எண்ணெய் விலை இறங்கி 97 டாலருக்கு கீழே சென்றது. கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழே இறங்கியது நம் நிறுவனங்களுக்கு லாபகரமான விஷயம். பணவீக்க விகிதம் வேகமாக குறைய கச்சா எண்ணெய் விலை இறக்கம் உதவும். அப்படி நடந்தால், ஆர்பிஐ வட்டியைக் குறைக்கலாம்.''

எஸ்பிஐ வங்கி வேகமான வளர்ச்சிக்குத் திட்டமிட்டிருக்கிறதே?

''பொதுத்துறை வங்கிகளிலேயே முதல்முறையாக பணியாளர்கள் அனைவருக்கும் பங்கு ஒதுக்கி கொடுக்க எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது. மொத்தம் உள்ள 2.19 லட்சம் பணியாளர்களுக்கு இப்படி பங்கு ஒதுக்கித்தந்து, அவர்களின் செயல்திறனை அதிகரிக்க கடந்த மார்ச் மாதத்திலேயே எஸ்பிஐ திட்ட மிட்டிருந்தது. அப்போது பங்கின் விலை மிகவும் இறங்கி காணப்பட்டதால், அப்போது அந்த முடிவு கைவிடப்பட்டது. இப்போது நிலைமை சீராகி இருப்பதால் பணியாளர்களுக்கு பங்குகளை வழங்கும் வேலையை எஸ்பிஐ ஆரம்பித்துள்ளது.''

இந்தியாவில் அனைவரும் பங்குச் சந்தை முதலீடு செய்வது என்பது கஷ்டமாக இருக்கும் போலிருக்கே?

மேலும் வாசிக்க விற்பனையில் இருக்கும் நாணயம் விகடனை வாங்கி படியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close