Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேண்டுமென்றே கடனை கட்டாதவர்களுக்கான நெறிமுறை விரைவில் வருகிறது - செபி

வங்கிகளிடம் இருந்து பெற்ற கடனை வேண்டுமென்றே கட்டாமல் இருக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேப்பிட்டல் மார்க்கெட் நெறிமுறையாளரான செபி அமைப்பு அறிவித்திருந்தது.
 
இந்தநிலையில் நேற்று செபியின் தலைவர் யூ.கே.சின்ஹா வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுமென்றே கடனை திரும்ப செலுத்தாதவர்களது பட்டியல் தயாராகி வருகிறது என்றும் இந்த பட்டியல்கண்டிப்பாக வருடாந்திர அறிக்கையில் இடம்பெறும் என்றும் கூறினார்.
 
தற்போது வேண்டுமென்றே கடனை திரும்ப செலுத்தாத நிறுவனத்தை யுனைடெட் வங்கி அறிவித்ததை அடுத்து மற்ற வங்கிகளும் தங்கள் வங்கியில் வேண்டுமென்றே கடனை திரும்ப செலுத்தாதவர்களது பட்டியலை தயாரித்து வருகிறது. விரைவில் இந்த நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சட்டத்தில் இதுபோன்ற நிறுவனங்களுக்கான நெறிமுறைகள் புதிதாக கொண்டுவரப்படும் என்றும் கூறியுள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close