சரிவில் இந்திய சந்தைகள்!!
இன்றைய நாளின் முடிவில் இந்திய சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 431 (-1.58%) புள்ளிகள் குறைந்து 26,775 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 128 புள்ளிகள் (-1.58%) குறைந்து 8017 புள்ளிகள் என்ற அளவிலும் முடிவடைந்துள்ளன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.94 ரூபாயாக உள்ளது. சிரியாவில் நிலவி வரும் போர் பதற்ற நிலை மற்றும் உலக நாடுகளில் அரசியல் பதற்றம் காரணமாகத்தான் இன்றைய பங்குச் சந்தையானது மிகப் பெரும் இறக்கத்தை சந்தித்துள்ளது என்று கூறப்படுகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் ஆயில் அண்டு கேஸ் மற்றும் பொதுத்துறை, மெட்டல், ஹெல்த்கேர் நிறுவனங்கள் 2-5% இறக்கத்தையும், வங்கி, ஆட்டோ மற்றும் பவர் துறை சார்ந்த நிறுவனங்கள் 1.5-1.9% வரையிலான இறக்கத்தையும் சந்தித்துள்ளன. எஃப் எம்சிஜி மற்றும் ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள் சந்தித்திருக்கும் இறக்கத்தின் சதவிகிதங்கள் முறையே 0.4% மற்றும் 0.6% ஆகும்.