கமாடிட்டி A-Z தொடர் 11
கமாடிட்டி வியாபாரம் 11
தி.ரா.அருள்ராஜன்
தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.
ஹெட்சிங்...... ஒரு முடிவுக்கு கொண்டுவருவது எப்படி?
ஒரு தனிமனிதராக சேகர் எவ்வாறு ஹெட்ஜிங் முறையை பயன்படுத்தினார் என்று கடந்த இரண்டு வாரங்களாக பார்த்தோம். அதாவது, சந்தையில் ஒரு ஸ்பெகுலேட்டாரக நுழையும் நாம், சூழ்நிலை நமக்கு பாதகமாக மாறும்போது, பெரிய அளவில் நஷ்டம் வரும்போது, நாம் ஹெட்ஜிங் என்ற ஆயுதத்தை கையில் எடுக்கிறோம்.
இது சரியா? அல்லது தவறா?
இந்த கேள்விக்கு விடை சொல்லும்போது, முதலில் சேகர் தன்னுடை லாங் பொஷிஷன் நஷ்டத்தை நோக்கி போகும்போது அவர் ஹெட்ஜ் பண்ணியது, நஷ்டத்தை ஒரு அளவில் நிறுத்த உதவியது என்று பார்த்தோம்.
அதுவரை சரிதான்....
ஆனால், அந்த ஹெட்ஜில் இருந்து எப்போது விடுபடுவது என்பதில் தெளிவில்லாமல் இருந்தார். ஹெட்ஜில் இருந்து விடுபட்டு, தன்னுடைய டிரேடை தொடர்வதற்க்கு பதிலாக, ஹெட்ஜில் எதில் லாபம்
.jpg)
இருக்கிறதோ அந்த ஹெட்ஜை பகுதியில் இருந்து வெளியே வந்தார். நோக்கம் என்ன? அந்த பொஷிஷனில் இருந்த லாபத்தை எடுக்க முனைந்தார்.
லாபம் இருக்கும் பகுதியை வெளியே எடுப்பது தப்பா?
பொதுவாக லாபத்தை வெளியே எடுப்பதை தப்பு என்று சொல்லமுடியாது, இந்த எடுத்துக்காட்டில், ஷாட் ஹெட்ஜை எடுத்த பிறகு, அதாவது, அதில் உள்ள லாபத்தை எடுப்பதாக நினைத்துக்கொண்டு எடுத்த பிறகு, நம் நிலை என்ன?
நாம் லாபத்தை வெளியே எடுத்தாலும், ஏறக்குறைய அந்த அளவிற்க்கு நஷ்டம் இருப்பது உண்மைதானே?
நம்முடைய லாங் பொஷிஷன் இப்போது, நேக்ட் பொஷிஷனாக மாறுகிறது. எனவே இப்போது, நாம் லாங் சைடில் இருக்கிறோம். ஹெட்ஜை எடுத்துவிட்டோம். இனி சந்தை ஏறினால், நமக்கு சாதகம். சந்தை இறங்கினால், நஷ்டம் பெரியதாக மாறும்
சேகர் செய்த வியாபாரத்தில், ஹெட்ஜ் பொஷிஷனை எடுத்தப்பிறகு, லாங் பொஷிஷன் மட்டுமே இருந்தது. அதன் பிறகு சந்தை இறங்க ஆரம்பித்தது. இதனால், சேகரின் லாங் பொஷிஷன் ஏற்கெனவே நஷ்டத்தில் இருக்கிறது. இந்த இறக்கத்தினால், இவரின் நஷ்டம் அதிகம் ஆனாது.
கையில் பணம் இல்லாத நிலையில் இதுபோன்ற சூழ்நிலையில் பெரும்பாலும், புரோக்கர்கள், சேகரின் பொஷிஷனை குளோஸ் பண்ணிவிடுவார்கள்.
.jpeg)
நம் கதையில், சேகருக்கு புரோக்கர் கொஞ்சம் கால அவகாசம் கொடுத்ததாக சொல்லியிருந்தேன். அவர் அதிஷ்டம், அவர் லாங் பொஷிஷனுக்கு சாதகமாக சந்தை ஏறியது. அதன் பின், நோ லாஸ் நோ பிராஃபிட் நிலையை அவர் அடைந்தார் என்று சொல்லியிருந்தேன்.
இதில் எது சரி?
ஹெட்ஜ் செய்திருந்த நிலையில், ஷாட் பொஷிஷனனில் லாபம் இருக்கிறது என்ற நினைப்பில் அதை குளோஸ் பண்ணுவது சரியில்லை.
இந்த இடம்தான் மிக மிக முக்கியமான இடம்.
எல்லோரும் யோசிக்கவேண்டிய இடம். அறிவு பூர்வமாக யோசிக்கவேண்டிய இடம். ஏன் இதை இங்கே அழுத்தம் திருத்தமாக உங்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்றால், இந்த ஹெட்ஜிங் முறையை எப்படி உபயோகம் பண்ணவேண்டும் என்று தெரிந்துகொள்ளவேண்டிய இடமும் இதுதான்.
இப்ப நாம ஏறும் என்ற நினைப்பில் (ஆய்வின்படி) வாங்கிவிட்டோம். ஏறுவதற்க்கு பதிலாக இறங்க
ஆரம்பித்துள்ளது. இறங்கும் போது ஒன்று நாம் ஸ்டாப்லாஸ் போட்டு வெளியே வருவது ஒரு வகை. ஆனால், நாம் இன்னும் நம்புகிறோம், நம் முடிவு சரி, எப்படியும் திரும்ப ஏறும், ஆனால், எவ்வளவு தூரம் இறங்கிவிட்டு ஏறும் என்று தெரியாது. அந்த இறக்த்தை தாக்குபிடிக்கும் அளவு பணமும் இல்லை என்றுகூட வைத்துக்கொள்ளலாம். அந்த நிலையில் நாம் அடுத்த மாத கான்டிராக்டில் ஷாட் பொஷிஷனை எடுக்கிறோம்.
.jpg)
இது சரியான முடிவின் ஒரு பகுதி. முடிவின் அடுத்தபகுதிதான் மிக மிக முக்கியமானது.
நாம் ஹெட்ஜ் போட்ட பிறகு சந்தை இறங்குகிறது. நாம் பயப்படவேண்டியதில்லை. ஏனெனில், இந்த இறக்கத்தில் வரக்கூடிய நஷ்டத்திற்க்கு, ஹெட்ஜில் உள்ள ஷாட் பொஷிஷன் ஈடுசெய்துவிடும். நம் உடலிலும் எந்த நடுக்கம் இல்லை. நம் அறிவை நன்கு தீட்டி வேலை செய்யவும் வைத்திருக்கிறோம்.
ஒரு நல்ல இறக்கத்திற்க்கு பிறகு, சந்தை மேலே திரும்பவதாக வைத்துக்கொள்ளலாம். நம் ஆய்வின்படி சந்தை மேலே திரும்ப துவங்கிவிட்டது. இனி இறங்காது என்று நாம் நம்பும்போது, ஹெட்ஜில் இருக்கும் ஷாட் பொஷிஷனை எடுத்துவிடுகிறோம். எடுத்த பிறகு சந்தை தொடர்ந்து ஏறும்போது, நமக்கு இரண்டு அனுகூலங்கள்.
1. ஏற்கெனவே நான் ஷாட் அடித்ததில், பொஷிஷனை கீழே குளோஸ் பண்ணியதால், நாம் லாபத்தை லாக் செய்துவிட்டோம்.
2. அவ்வாறு லாக் செய்த லாபம், நம்முடைய பிரேக் ஈவன் பாய்ண்டை தற்போது சந்தை விலைக்கு சற்றே அருகாமையில் கொண்டு வந்துவிடும்.
இதனால், சந்தை தொடர்ந்து ஏறும்போது, பிரேக் ஈவன் பாயிண்டை அடைவதும் எளிது. சந்தை தொடர்ந்து ஏறும்போது, நாம் வாங்கியவிலைக்கு சந்தை நகர்ந்தால், நாம் ஷாட் அடித்ததில் வந்த லாபம் நல்ல லாபமாக மாறும்.
இதையும் நாம் தாண்டி நாம் வாங்கியவிலையைவிட சந்தை நன்கு ஏற ஆரம்பித்தால், இதை டபுள் டமாக்கா என்று சொல்லலாம். அதாவது ஷாட் அடித்ததன் மூலம் வந்த லாபமும், பின்பு சந்தை நாம் வாங்கிய விலையைவிட கூடுதலாக வந்து லாபமும் சேர்ந்து கொள்ளும். இதுதான் ஹெட்ஜின் செய்வதன் மிகப்பெரிய சாதகமான அம்சம் ஆகும்.
இதில் இன்னும் ஒரு கேள்வியும் உண்டு?
அதாவது, நம் ஆய்வின்படி சந்தை இனி மேலே திரும்பும் என்று கணித்து, ஹெட்ஜில் இருந்து ஷாட் பொஷிஷனனை குளோஸ் பண்ணிய பிறகு, ஒருவேளை சந்தை தொடர்ந்து இறங்கினால்....
என்ன நடக்கும்?
நாம் லாங் பொஷிஷன் நேக்ட் பொஷினான மாறி அதன் பின், இறக்கத்தினால் அதிக நஷ்டம் வர ஆரம்பிக்கும். மீண்டும் நாம் குழப்பான நிலைக்கு தள்ளப்படுவோம். அதன் பின் நஷ்டத்தின் மேல் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
இதற்க்கு தீர்வு உண்டா?
உண்டு.
நம் ஆய்வின்படி சந்தை இனி மேல் நோக்கி திரும்பிவிட்டது என்று முடிவு செய்து, ஷாட் ஹெட்ஜை எடுக்கும்போது, மீதம் உள்ள, லாங் பொஷிஷனுக்கு, ஒரு ஸ்டாப் லாசை போடலாம். இதனால், ஒரு வேளை இறங்கினாலும், ஒரு குறிப்பிட்ட நஷ்டத்தை மட்டுமே சந்திப்போம்.
இப்ப நமக்கு இன்னும் ஒன்றும் தோன்றலாம். அட போங்க சார், இங்க வந்து ஸ்டாப் லாஸ் போடறதுக்கு, நான் ஹெட்ஜ் எதுவும் போடாமலே, லாங் எடுத்த உடனே ஒரு ஸ்டாப் லாசை போட்டுவிடுனே?
இந்த எண்ணம் கண்டிப்பாக சரிதான். நாம் வாங்கியவுடன், இறங்க ஆரம்பித்தால், நாம் ஏறும் என்று நினைக்கவைத்த ஆய்வு இப்போது தவறாகிவிட்டது என்று எடுத்துக்கொண்டால், இந்த எண்ணம் கண்டிப்பாக சரிதான்.
ஆனால், ஏறும் என்று நாம் செய்த ஆய்வை இன்னும் சரி என்று நம்பும்போது, சந்தை தொடர்ந்து இறங்கும்போதுதான், நாம் இந்த ஷாட் ஹெட்ஜ் செய்வதைபற்றியே யோசிக்கிறோம்.
அப்படி ஷாட் ஹெட்ஜ் போட்டால், பின்பு சந்தை இறங்கினால், எப்படி கையாளவேண்டும் என்று விளக்கமாக பார்த்தோம் அல்லவா!
இதில் இன்னும் ஒரு சூழ்நிலையையும் நாம் பார்க்கவேண்டும்.
அதாவது, நாம் ஏறும் என்று லாங் பொஷிஷன் எடுத்த பிறகு, சந்தை இறங்கினால், நஷ்டத்தை தடுக்க, நாம் ஷாட் ஹெட்ஜ் போட்டுவிட்டோம். இதன் பிறகு, ஒரு வேளை சந்தை ஏற ஆரம்பித்தால்......
என்ன செய்யவேண்டும்?

ஆனால், இப்போது, மீண்டும் நிலைமை மாறி, நாம் ஏறும் என்று நினைத்த மாதிரியே சந்தை மீண்டும் ஏற ஆரம்பிக்கும்போது, இனி தொடரந்து வலிமையாக ஏறும் என்று நாம் நம்மும்போது, ஷாட் ஹெட்ஜ் பொஷிஷனில் இருந்து வெளியே வரவேண்டும்.
அப்பாடா..........
ஒருவழியா ஹெட்ஜ் பத்தி படிக்கிறதே முடித்துவிட்டோம்.
முடித்துவிட்டோம்தான். எப்படி ஏறும் என்று நினைத்து லாங் பொஷிஷனை எடுத்த பிறகு, சந்தை இறங்கியதால், ஷாட் ஹெட்ஜிங் பண்ணினோமோ, அதேபோல், இறங்கும் என்று எண்ணி, நாம் ஷாட் பொஷிஷன் எடுக்கும்போது, சந்தை ஏறினால், லாங் ஹெட்ஜ் செய்வதும், ஹெட்ஜிங் செய்வதன் ஒரு பகுதிதான்.
இதுவரை நாம் ஒரு ஸ்பெகுலேட்டராக இந்த வியாபாரத்தில் இறங்கும்போது, எப்படி ஹெட்ஜ் செய்வது என்று பார்த்தோம் அல்லவா!
அதைப்போலவே.... ஒரு பொருளை வியாபார ரீதியாக வாங்கி வைப்பவர்களும், அந்த பொருளின் விலை இறங்க ஆரம்பித்துவிடும் என்று நம்பும்போது, சந்தையில் வந்து அந்த பொருளின் மீது, ஷாட் பொஷிஷனை எடுக்கலாம்.
எடுத்துக்காட்டாக, ஒரு தங்க வியாபாரி, இந்த மாதம் வியாபாரம் செய்வதற்க்காக 10 கிலோ தங்கம் வாங்குவதாக வைத்துக்கொள்ளலாம். வாங்கிய தங்கத்தை விற்பதற்க்கு ஓரிரு மாதங்கள் ஆகலாம். இந்த நிலையில் தங்கத்தின் விலை குறையும் என்று நம்பும்போது, அவர் பொருட்சந்தையில், 10 கிலோ தங்கத்தை ஷாட் செய்வதன் மூலம், விலை குறைந்தாலும், அவரால் தாக்குபிடிக்க முடியும். இல்லை என்றால், தங்கம் விலை குறையும்போது, அது லாபத்தை அடித்து சென்றுவிடும். சமயத்தில் பெரும்நஷ்டத்திலும் கொண்டுபோய்விடும்.
அதேபோல, நம் வீட்டில் ஒரு திருமணம் நடக்க இருக்கிறது. அடுத்த ஓரிரு மாதங்களில் 50 பவுன் தங்கத்தில், நகை வாங்க வேண்டி இருக்கும். ஒரு பவுன் 8 கிராம். அப்படி என்றால், 50 பவுன் என்பது 400 கிராம் தங்கம் ஆகும். ஓரிரு மாதங்களில் விலை ஏறிவிடும் என்று நம்பினால், நாம் 400 கிராம் தங்கம் (100 கிராம் தங்கத்தில் 4 லாட்) அளவிற்க்கு பொருட்சந்தையில் லாங் போகலாம். அதில் பார்த்தால், நாம் 5% அளவே முதலீடும் செய்யவேண்டி இருக்கும்.
அப்பாடா............
உண்மையாகவே ஹெட்ஜிங் முடிந்துவிட்டதுங்க.
இனி, ஆர்பிட்ரேஜ் படிக்கலாம்?
அது அடுத்தவாரம்.