Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நகர்புற உள்கட்டைப்புக்கு ரூ. 25,000 கோடி!

 
இந்திய நகர்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 25,000 கோடி முதலீடு தேவைப்படுகிறது என மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். 
 
அடுத்த 20 வருடங்களில் இந்த முதலீட்டுக்கான தேவை உள்ளது எனவும், இந்த முதலீட்டு வாய்ப்பை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசிய வெங்கய்யா நாயுடு ‘‘ இந்திய நகர்புறங்களில் போக்குவரத்து, குடிநீர் விநியோகம், சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
 
20 50 சதவிகித மக்கள் நகரப்புறங்களில்தான் உள்ளனர். அவர்களுக்கான இந்த தேவைகளை நிறைவேற்றுவது சவாலான விஷயம். இந்த வாய்ப்பை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நகர்புறங்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுவதுடன், பொருளாதர வளர்ச்சியும் மேம்படும்’’ என தெரிவித்துளார். அடுத்த பதினைந்து இருபது ஆண்டுகளை இலக்காக வைத்து, இந்த முதலீடுகளை வரவேற்கிறோம் என்றும் அந்த கூட்டத்தில் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். 
 
ஐந்து நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் 40 நாடுகளைச் சேர்ந்த 1000 முதலீட்டாளர்கள் கலந்து 
கொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close