Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் ஃபேஸ்புக் நிறுவனம்!


இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இந்தியா முழுவது டிஜிட்டல் மையமாக்கும் திட்டத்தில் ஃபேஸ்புக் நிறுவனமும் பங்குபெறும் என அந்நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூகர்பர்க் இன்று தெரிவித்திருக்கிறார். இன்று இந்தியா வந்திருக்கும் அவர் நாளை நரேந்திர மோடியை சந்தித்து இது குறித்து பேச இருக்கிறார். அதற்கு முன்பாக மார்க் ஜூகர்பர்க் சொல்லியிருப்பதாவது, "இந்தியா எல்லையற்ற ஆற்றலைக் கொண்ட மிகச் சிறந்த நாடு. மிகப்பெரிய லட்சியங்களுடன் இருக்கும் இந்த நாட்டில் ஃபேஸ்புக் செயல்பாடு அதிகரித்து காணப்படுகிறது. எங்களுக்கு இந்த நாட்டில் அதிகமான வளர்ச்சி இருக்கிறது என்பதை உணர்கிறோம்.

நாளை இந்நாட்டின் பிரதமரை சந்திக்க இருக்கிறேன். அப்போது இந்திய கிராமங்களை ஆன்லைன் மூலம் இணைக்கும் அவரது திட்டத்தில் ஃபேஸ்புக் பங்கு எப்படி இருக்கும் என்பதை உற்சாகமாக எதிர் கொள்ள இருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார். மேலும் அமெரிக்காவில் இருக்கும் 911 இன்டர்நெட் திட்டத்தை போல இந்தியாவிலும் கொண்டு வர இருப்பதாக மார்க் தெரிவித்திருக்கிறார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close